செய்திகள் :

சென்னை: திருமண ஆசையை காட்டி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த இளைஞர் - சிக்கியது எப்படி?

post image

சென்னை, அயனாவரம், புதுநகர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்த அந்தப் பெண், இணையதள திருமண தகவல் மையம் மூலம் வரன் தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த அலி ஹர்மான் என்பவர், இணையதள திருமண தகவல் மூலம் இளம்பெண்ணுக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் செல்போன் நம்பர்களை பகிர்ந்து பேசி வந்தனர்.

திருமணம்
திருமணம்

இந்தநிலையில் 16.09.2026-ம் தேதி அலிஹர்மான், அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரின் குடும்பத்தினரிடம் முறைப்படி பெண் கேட்டார். அதற்கு பெண் வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அலி ஹர்மான், அவசர தேவை எனக்கூறி 50,000 ரூபாயை அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். உடனே அந்தப் பெண்ணும் அலிஹர்மானுக்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

இதையடுத்து 19.09.2026-ம் தேதி திருமணத்துக்கு நகைகள் வாங்க வேண்டும். அதனால் உன்னிடம் உள்ள பழைய தங்க நகைகளைக் கொடு என்று அலிஹர்மான் அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார். அதனால், கம்மல், மோதிரம், செயின் என மொத்தம் சுமார் 1¼ சவரன் தங்கநகைகளை அந்தப் பெண் அலிஹர்மானிடம் கொடுத்திருக்கிறார்.

பணம், தங்க நகைகளை வாங்கிய பிறகு அலிஹர்மான் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். அதனால் அந்தப் பெண் அலி ஹர்மானுக்கு பல தடவை போன் செய்தும் அவரிடம் பேச முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்தார். இதையடுத்து அயனாவரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் அந்தப் பெண் புகார் அளித்தார். அலி ஹர்மானுக்கு பணம் அனுப்பி ஆதாரத்தையும் போலீஸாரிடம் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அலிஹர்மானைத் தேடி வந்தனர்.

கைது

பின்னர் அவரைப் பிடித்து விசாரித்தபோது தங்க நகைகள், பணம் வாங்கியதை அவர் ஒப்புக் கொண்டார். அந்தப் பணத்தில் விலை உயர்ந்த செல்போன் வாங்கியதையும் அலி ஹர்மான் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அலிஹர்மான், Medical Representative-யாக வேலை செய்து வருவது தெரியவந்தது.

இதுகுறித்து அயனாவரம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட அலி ஹர்மான் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவரின் பின்னணியை விசாரித்து வருகிறோம்'' என்றனர்.

`அடையாளம் காட்டிய ஸ்கூல் பேக்' - யூடியூப்பர் மதுமிதாவின் நகை கொள்ளையில் எஸ்.பி சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

சென்னை: தாயின் கண்முன் மகன் கொலை - நடந்தது என்ன?

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரசு. இவரின் மகன் அஜித் (28). இவர் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சுற்றி வளைத்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.... மேலும் பார்க்க

நெல்லையில் `இரட்டைக் கொலை' - கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் கொல்லப்பட்ட சோகம்

வணிக முக்கத்துவம் வாய்ந்த நெல்லை டவுன் பகுதியில் இன்று இரட்டைக் கொலை நடந்ததால், அந்தப் பகுதியே பரபரப்புக்கு உள்ளாகியது. உடனடியாக அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், நெல்லை மாநகர காவல... மேலும் பார்க்க

காரின் மேல் தொங்கியபடி சென்று குட்கா கும்பலைப் பிடித்த போலீஸ்; முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு

கடந்த 27ம் தேதியன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் துறையினர், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ச... மேலும் பார்க்க

நாகர்கோவில் யூடியூப்பர் வீட்டில் கொள்ளை; "வீடியோ பார்த்து ஸ்கெட்ச் போட்டனர்" - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

பரமக்குடி: ஆட்டோ டிரைவர்கள் மோதலைத் தடுத்த பெண் போலீஸ்; தள்ளிவிடப்பட்டதால் பலியான சோகம்

பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் கண்ணகி (35). இவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளன. நேற்று, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்... மேலும் பார்க்க