செய்திகள் :

சென்னை: தாயின் கண்முன் மகன் கொலை - நடந்தது என்ன?

post image

சென்னை: ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சரசு. இவரின் மகன் அஜித் (28). இவர் வீட்டின் வாசலில் அமர்ந்து அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அஜித்தை சுற்றி வளைத்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதைப்பார்த்த சரசு, அவர்களை தடுத்தார். இதில் சரசுக்கும் வெட்டு விழுந்தது.

அஜித்தை வெட்டி சாய்த்த அந்தக் கும்பல் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அஜித்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அஜித்

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், மர்ம கும்பலை விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சரசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

மேலும் கஞ்சா விற்பனையும் இந்தக் கொலைக்கு ஒரு காரணம் என தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் பிரபல ரௌடி ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்ததையடுத்து அவரையும் அவரின் கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.

`அடையாளம் காட்டிய ஸ்கூல் பேக்' - யூடியூப்பர் மதுமிதாவின் நகை கொள்ளையில் எஸ்.பி சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

சென்னை: திருமண ஆசையை காட்டி இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த இளைஞர் - சிக்கியது எப்படி?

சென்னை, அயனாவரம், புதுநகர் பகுதியில் வசித்து வரும் 32 வயது பெண் ஒருவர் அழகுக்கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த... மேலும் பார்க்க

நெல்லையில் `இரட்டைக் கொலை' - கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் கொல்லப்பட்ட சோகம்

வணிக முக்கத்துவம் வாய்ந்த நெல்லை டவுன் பகுதியில் இன்று இரட்டைக் கொலை நடந்ததால், அந்தப் பகுதியே பரபரப்புக்கு உள்ளாகியது. உடனடியாக அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன், நெல்லை மாநகர காவல... மேலும் பார்க்க

காரின் மேல் தொங்கியபடி சென்று குட்கா கும்பலைப் பிடித்த போலீஸ்; முதல்வர் நேரில் அழைத்து பாராட்டு

கடந்த 27ம் தேதியன்று கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் துறையினர், வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி ச... மேலும் பார்க்க

நாகர்கோவில் யூடியூப்பர் வீட்டில் கொள்ளை; "வீடியோ பார்த்து ஸ்கெட்ச் போட்டனர்" - போலீஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் வசித்துவரும் யூடியூப்பர் மதுமிதா வீட்டில் கடந்த 24-ம் தேதி இரவு வீட்டின் பின் கதவை கட்டர் மெஷின் மூலம் உடைத்து சுமார் 118 சவரன் தங்க நகைகள் கொள்ளையட... மேலும் பார்க்க

பரமக்குடி: ஆட்டோ டிரைவர்கள் மோதலைத் தடுத்த பெண் போலீஸ்; தள்ளிவிடப்பட்டதால் பலியான சோகம்

பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் கண்ணகி (35). இவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளன. நேற்று, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்... மேலும் பார்க்க