செய்திகள் :

பரமக்குடி: ஆட்டோ டிரைவர்கள் மோதலைத் தடுத்த பெண் போலீஸ்; தள்ளிவிடப்பட்டதால் பலியான சோகம்

post image

பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் கண்ணகி (35). இவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளன. நேற்று, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கப்பட்டு பணியில் இருந்துள்ளார்.

காவலர் கண்ணகி
காவலர் கண்ணகி

இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் மருத்துவமனைக்கு வெளியில் சண்டையிட்டு கொண்டதால் ஏற்பட்ட காயத்துடன் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர்.

அப்போது மருத்துவமனைக்குள் இரண்டு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் கண்ணகி மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுத்துள்ளார்.

இந்நிலையில் சண்டையிட்ட இளைஞர் கருப்பு ராஜா என்பவர் பெண் காவலர் கண்ணகியைத் தள்ளி விட்டுள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கண்ணகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காவலர் கண்ணகியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.

கருப்பு ராஜா
கருப்பு ராஜா

ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் காவலர் கண்ணகி உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த வந்த போலீஸார், கண்ணகியைக் கீழே தள்ளிவிட்ட கருப்பு ராஜாவைக் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மோதலைத் தடுக்க சென்ற பெண் காவலர் பலியான சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுராந்தகம்: மாற்றுத்திறனாளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; கும்பலைத் தேடும் போலீஸ்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவரா... மேலும் பார்க்க

கணவரின் 2வது திருமணத்துக்கு எதிர்ப்பு; ஒன்றரை ஆண்டுக்குப்பின் எலும்புகள் மீட்பு - சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி என்பவரும் கடந்த 2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மக... மேலும் பார்க்க

`ரூ.200 சம்பளம்' - போதைப்பொருள் விற்பனை செய்ய 15 வயது சிறுவனை வேலைக்கு வைத்த மும்பை பெண் | அதிர்ச்சி

மும்பையில் சிறுவர்களைக்கூட போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மும்பை தேவ்னார் பகுதியில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவண்டி பக... மேலும் பார்க்க

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை? பரவிய தகவல்; வெடித்த கலவரம்! - என்ன நடந்தது?

பஞ்சாப்பில் உள்ள பக்வாராவில் இருக்கிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சமூக வலைதளப் பதிவு ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அந்தப் பல்கலைக்கழக ஹாஸ்டலில் ப... மேலும் பார்க்க

`எங்களை யாரும் பாலியல் கொடுமை செய்யவில்லை; எல்லாம் கட்டுக்கதை'- பஞ்சாப் பல்கலை., மாணவிகள் விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வரா என்ற இடத்தில் இருக்கும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும... மேலும் பார்க்க

எம்.டி.எம்.ஏ வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆசிரியை; காவல் நிலைய வளாகத்தில் கத்தியால் குத்திய நபர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில... மேலும் பார்க்க