செய்திகள் :

சிவாஜியின் 99வது பிறந்தநாளில் 'திருவிளையாடல்' டிரெய்லர்! பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

post image

தமிழ் சினிமாவின் பக்தி காவியங்களில் பெரும் வரவேற்பை அள்ளிய படம 'திருவிளையாடல்'. ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், டி.எஸ்.பாலையா என நடிப்பில் முத்திரை பதித்த கலைஞர்கள் நடித்த 'திருவிளையாடல்' வெளியாகி 60 ஆண்டுகளை கடந்தாலும் இன்று ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த காவியமாக இடம்பெற்றிருக்கிறது.

இந்த படம் இப்போது வெளிநாட்டில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டு, ரீரிலீஸ் காணவிருக்கிறது. இதற்கு முன்னதாக படத்தின் டிரெய்லர் ரிலீஸும் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இது குறித்த தகவல்களை விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

சிவாஜி, சாவித்ரி

கடந்த 1965ம் ஆண்டு 'திருவிளையாடல்' படம் திரைக்கு வந்தது. சிவபெருமான சிவாஜி, கயற்கண்ணியாக சாவித்ரி, அவ்வையாக கே.பி.சுந்தராம்பாள், ஹேமந்த பாகவதராக டி.எஸ்.பாலையா, மன்னர் செண்பகப்பாண்டியனான முத்துராமன், தருமியாக நாகேஷ் என தமிழின் தேர்ந்த நடிகர்களின் சங்கமமாக இந்த படம் அமைந்திருந்தது.

இந்த படம் எப்படிப்பட்ட வெற்றியை குவித்த திரைப்படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இப்போது இந்த படம் நவீன தொழில்நுட்பத்தில் ரெடி செய்யப்பட்டுள்ளது.

ஏ.பி.நாகராஜன்

பொதுவாக இதற்கு முன் டிஜிட்டலைஸ்ட் செய்யப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் பலவும், சென்னையில் தான் டிஜிட்டல் வேலைகள் செய்யப்பட்டதாக இருக்கும். ஆனால் இதில் ரொம்பவும் ஸ்பெஷல். இதன் டிஜிட்டல் வேலைகள் ஜெர்மனியிலும், லண்டனிலும் செய்துள்ளதுடன், படத்தின் டிரெய்லரும் ரெடி செய்துள்ளனர்.

வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று சிவாஜியின் 99வது பிறந்ததினம் வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா அன்று சென்னையில் கேசினோ திரையரங்கில் நடத்துகின்றனர். சிவாஜியின் தீவிர ரசிகரான பி.வி.முரளி இப் படத்தின் வெளியீட்டை ஒருங்கிணைத்து வருகிறார். ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா மறு வெளியீடு செய்ய இருக்கிறார்.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம் பங்கேற்கிறார். தவிர தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், ஒய்.ஜி மகேந்திரன் , இளவரசு, வடிவுக்கரசி, அண்ணாதுரை கண்ணதாசன், இயக்குனர் பூபதி ராஜா , முனைவர் மருது மோகன் என பலரும் பங்கேற்று பேசவிருக்கிறார்கள். சில படங்களைத்தான் காலத்தால் அழியாத காவியமென சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்த 'திருவிளையாட'லுக்கு எப்போதும் முதலிடம் உண்டு.!

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய ரசிகர் மன்றம்; வாழ்த்திய விஜய் சேதுபதி

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தவெக ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் விஜய் சேத... மேலும் பார்க்க

சூது கவ்வும் : சரவெடிக் குதூகலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 28

`சினி'ஸ்கோப் 28சூது கவ்வும் : சரவெடிக் குதூகலம்!’எங்க பரம்பரையில எவனும் ஜாகுவார் காரைக் கழுவுனது கூட கிடையாது. அப்படிப்பட்ட பரம்பரையில வந்துட்டு அப்படி ஒரு காரை ஓட்டியிருக்கேன்னா, அதுக்காக ஒரு வேலை இல... மேலும் பார்க்க

நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம்! - விவரம் என்ன?

சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது தன் ரசிகர் சந்திப்பை நிகழ்த்த, ஓய்வு நேரத்தைக் கழிக்க, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என ... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "இதுக்கு போய் சீரியஸாக ரிப்ளை பண்றீங்க.!" - வெங்கட் பிரபு பதிவும், SK பதிலும்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது. கங்கை அமரன், அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என... மேலும் பார்க்க

Dorothy: "சிலர் படம் பார்க்காமல் தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பிவிடுறாங்க.!"- கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் கடந்த செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இ... மேலும் பார்க்க

Don't Trouble The Trouble: "இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை... நடித்ததும் இல்லை!"- ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க