செய்திகள் :

`ராமர் பணக்காரர்களின் கடவுள், சிவன் ஏழைகளின் கடவுள்' - ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக கண்டனம்

post image

ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற முழக்கத்தை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பிய ரேவந்த் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் ஏன் அதேபோன்று "ஹர ஹர மகாதேவ்" என்று முழங்குவதில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ''தென்னிந்தியாவை சேர்ந்த நாங்கள் திராவிடர்கள். அவர்கள் ஆரியர்கள். நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள், அதேவேளையில் அவர்கள் ராமரின் பக்தர்கள். சிவபெருமான் ஏழைகளின் கடவுள். ராமர் பணக்காரர்களின் கடவுள். இவ்விரு தெய்வங்களும் மக்களால் போற்றப்படுபவை'' என்றும் அவர் மேலும் கூறினார்.

ரேவந்த் ரெட்டியின் இக்கருத்து வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கலாச்சார பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.கவின் மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,''சிவபெருமானுக்கும் ராமருக்கும் இடையே ரேவந்த் ரெட்டி அரசியல் ரீதியான பிளவை ஏற்படுத்துகிறார். இந்த கருத்துகள் கடும் கண்டனத்திற்கு உரியவை''என்று தெரிவித்தார்.

மேலும் பாஜக தலைவர்கள் சிவபெருமானை முன்னிறுத்துவதில்லை என்ற ரெட்டியின் கூற்றை மறுக்கும் வகையில், காசி விஸ்வநாதர் கோயிலுடனான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்பையும், வேமுலவாடாவிற்கு அவர் மேற்கொண்ட பயணத்தையும் சஞ்சய் சுட்டிக்காட்டினார். மேலும், முன்பு 'முஸ்லிம்கள் என்றால் காங்கிரஸ், காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள்' என்று கூறிய ரேவந்த் ரெட்டி, இப்போது ராமருக்கும் சிவபெருமானுக்கும் இடையே அரசியல் ரீதியான எல்லைகளை வகுக்கிறார்.

வேமுலவாடாவில் 'தட்சிண காசி'யையும், பத்ராச்சலத்தில் 'தட்சிண அயோத்தி'யையும் கொண்ட தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ரெட்டிக்கு, ராமரையும் சிவபெருமானையும் வடக்கு மற்றும் தெற்கு எனப் பிரித்துப் பார்ப்பது சரியல்ல என்பது தெரிந்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைத் திரட்டுவதற்கு காங்கிரஸ் மத மற்றும் பிராந்திய அடையாளங்களைப் பயன்படுத்துகிறது. புவியியல் அல்லது சமூக அடிப்படையில் இந்து மரபுகளைப் பிளவுபடுத்த வேண்டாம்'' என்று ரெட்டியிடம் கேட்டுக்கொண்டார்.

வீரமணி போக்சோ வழக்கு: ``எனக்கும் வீரமணிக்கும் தொடர்பா?" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்!

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு தமிழ்நாட்டில் விவாதமாகியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விசாரணையில் இருக்கும் அவர் மீது, நேற்று மற்றொரு புகாரின் அடிப்படையில் போக்சோ வ... மேலும் பார்க்க

"ரூ.4000 வந்ததா?; வேலையில்லா பட்டதாரி படத்துல நடிச்ச தனுஷே அரசியலுக்கு வந்திட்டாரு.!” - கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. அந்தவகையில் நேற்றைய தினம் திமுக தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்... மேலும் பார்க்க

``ஞானேஷ் குமார் குற்றவாளி; உச்ச நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும்" - EX பாஜக அமைச்சர் RK சிங்

இந்தியாவின் முன்னாள் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை கேபினட் அமைச்சரும், முன்னாள் இந்திய ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியுமான ஆர். கே. சிங் தன் எக்ஸ் பக்கத்தில் SIR குறித்து நீண்ட ... மேலும் பார்க்க

`தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் திட்டமில்லை' - அஜித் பவார் கட்சியுடன் இணைவது குறித்து சரத் பவார்

மகாராஷ்டிராவில் 2023-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் மறைந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக பிரிந்தது. கட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியி... மேலும் பார்க்க

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்... மேலும் பார்க்க