செய்திகள் :

`'மாமா' என்று நீ அழைத்த நபர் உனக்கு மிக மோசமான செயலைச் செய்தார்; ஆனால் நீ..!' - நெகிழ வைத்த தீர்ப்பு

post image

டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமித் என்பவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி கோர்ட்டிற்கு வந்து குற்றம் செய்த நபரை அடையாளம் காட்டினாள். இதில் விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10.50 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜினி தனது தீர்ப்பை வழக்கமான தீர்ப்பாக கூறாமல் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எழுதும் கடிதமாக தீர்ப்பை வழங்கினார்.

அதில், ``குழந்தையே, இந்த நீதிமன்றம் உங்கள் மனுவிற்கு பதிலளித்துள்ளது. இன்று, நீங்கள் 'மாமா' என்று அழைத்தவர் இனி ஒருபோதும் சுதந்திரமாக நடமாடமாட்டார் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் கூண்டில்தான் வாழ்வார்.

அந்தக் கூண்டில் அவருக்கு வயதாகிவிடும். அந்தக் கூண்டில் அவர் இறந்துவிடுவார். அவர் உங்களையோ, உங்கள் சிறிய சகோதரியையோ அல்லது வேறு எந்த குழந்தையையோ இனி ஒருபோதும் காயப்படுத்த முடியாது. இந்த நீதிமன்றம் இதுவரை கண்டதிலேயே மிகவும் துணிச்சலான சிறுமி நீதான்.

நீ நீதிமன்றத்திற்கு வந்து, உனக்குத் தீங்கு இழைத்த நபரைச் சுட்டிக்காட்டி, உண்மையைச் சொன்னாய். 'அங்கிள்' என்று நீ அழைத்த அந்த நபர் உனக்கு மிக மோசமான ஒரு செயலைச் செய்தார். ஆனால் நீ அமைதியாக இருந்துவிடவில்லை. உன் தாயிடம் அதைத் தெரிவித்தாய். பேசுவதற்குத் தேவையான துணிச்சல் உனக்கு இருந்ததால், இனி அவரால் வேறொரு குழந்தைக்குத் தீங்கு இழைக்க முடியாது. உனது குழந்தைப் பருவத்தை இந்த நீதிமன்றத்தால் உனக்குத் திரும்பத் தர முடியாது. ஆனால், உனது வார்த்தைகள் செவிமடுக்கப்பட்டன என்பதையும், உனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் நீதிமன்றம் உனக்கு உறுதியளிக்க முடியும்.

இனி சூரிய ஒளியை பார்க்க முடியாது

உனக்குத் தீங்கு இழைத்த அந்த நபர், இனி ஒருபோதும் சுதந்திரமான மனிதராகச் சூரிய ஒளியைப் பார்க்க முடியாது''என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுமித் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிபதி பிரதீபா எம் சிங் மற்றும் நீதிபதி தினேஷ் பூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்தது. இதில் கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், கீழ் கோர்ட் நீதிபதி தெரிவித்த செய்தியை அச்சிட்டு சிறுமி அல்லது அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு வடமேற்கு டெல்லி மாவட்ட சட்டச் சேவைகள் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். இழப்பீட்டுத் தொகையுடன் இரண்டு வாரங்களுக்குள் செய்தி குழந்தைக்குச் சென்றடைய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.!

`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணையின்போது, மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அநியாய லாபக் கொள்ளையைச் சுட... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் காவலில் அடைக்கக் கோரும் சி.பி.ஐ-யின் கோரி... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" - உயர் நீதிமன்றம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல... மேலும் பார்க்க

அஜித்குமார் காவல் மரணம்: திருப்புவனம் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு; சிக்கியது எப்படி?

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல் மரண கொலை வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமா... மேலும் பார்க்க

மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட நால்வர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தா... மேலும் பார்க்க

`நான் அவனில்லை' - ஓல்டு மாங்க் ரம், விஸ்கி என விற்பனை செய்யப்படுவது ரம், விஸ்கி அல்ல! - முழு தகவல்!

மது பிரியர்களுக்கு ஓல்டு மாங்க் ரம் என்றால் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அந்த ரம் உண்மையில் ரம் இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. மகாராஷ்டிராவில் ஓல்ட் மாங்க்' (Old Monk) மதுபான... மேலும் பார்க்க