செய்திகள் :

’சாதிய வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’–அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை

post image

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் என்பவரின் கையை, ஆறுச்சாமி என்பவர் கடந்த 23ம் தேதியன்று அரிவாளால் வெட்டினார். இதில் அவரது கை துண்டான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அவரது கைதுமீண்டும் இணைக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் மருந்து அடிக்கும் விவகாரத்தில் சாதிய ஆணவத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகனை அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.6 இலட்சம் நிவாரண நிதியையும் அவர்கள் வழங்கினர்.

அமைச்சர் வன்னிஅரசு
அமைச்சர் வன்னிஅரசு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னிஅரசு, “கடந்த 23ம் தேதியன்று ஆனைமலையில் மிக மோசமான வன்கொடுமை சம்பவம் நடந்தது. டெங்கு காய்ச்சல் மருந்து அடிக்கும் விவகாரத்தில் பேரூராட்சி உறுப்பினரின் கணவர் கை வெட்டப்பட்டது. இந்த விவராகத்தில் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, மறுநாளே குற்றவாளையை கைது செய்தனர். மக்கள் அச்சத்தை போக்கியுள்ளனர்.

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்கட்டமாக வழக்கமாக 25 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படும். ஆனால் முதல்முறையாக முழு நிவாரணத் தொகையான ஆறு இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை அளிக்கப்படும்.

அமைச்சர் வன்னிஅரசு
அமைச்சர் வன்னிஅரசு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சமூக நீதித் துறை அமைச்சர்கள் தனித்தனியாக இல்லாமல், இருவரும் இணைந்து செயல்படுவது சமூக நல்லிணக்கத்தை காட்டுகிறது. சமூக நல்லிக்கணத்தை உருவாக்கும் அரசாக இருக்கிறது. மக்களை பாதுகாக்கும் அரசாக  உள்ளது. இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்ற அடிப்படையில் சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் குற்றவாளியின் மனைவி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுக்க வன்கொடுமை சம்பவங்களை கடந்து செல்லாமல் நடவடிக்கை எடுக்கிறோம். யாரும் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" - ஆதவ் அர்ஜுனா சாடல்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு, தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரசாரத்தை முன்னெடுத்த... மேலும் பார்க்க

மின்சாரத்துறையில் தனியார்: ``இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! " - சீமான் காட்டம்

வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்... மேலும் பார்க்க

வீரமணி போக்சோ வழக்கு: ``எனக்கும் வீரமணிக்கும் தொடர்பா?" - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்!

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு தமிழ்நாட்டில் விவாதமாகியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விசாரணையில் இருக்கும் அவர் மீது, நேற்று மற்றொரு புகாரின் அடிப்படையில் போக்சோ வ... மேலும் பார்க்க

"ரூ.4000 வந்ததா?; வேலையில்லா பட்டதாரி படத்துல நடிச்ச தனுஷே அரசியலுக்கு வந்திட்டாரு.!” - கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. அந்தவகையில் நேற்றைய தினம் திமுக தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்... மேலும் பார்க்க

`ராமர் பணக்காரர்களின் கடவுள், சிவன் ஏழைகளின் கடவுள்' - ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக கண்டனம்

ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கடவுள்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், "ஜெய் ஸ்ரீ ராம்" என... மேலும் பார்க்க

``ஞானேஷ் குமார் குற்றவாளி; உச்ச நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும்" - EX பாஜக அமைச்சர் RK சிங்

இந்தியாவின் முன்னாள் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை கேபினட் அமைச்சரும், முன்னாள் இந்திய ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரியுமான ஆர். கே. சிங் தன் எக்ஸ் பக்கத்தில் SIR குறித்து நீண்ட ... மேலும் பார்க்க