செய்திகள் :

நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம்! - விவரம் என்ன?

post image

சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது தன் ரசிகர் சந்திப்பை நிகழ்த்த, ஓய்வு நேரத்தைக் கழிக்க, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என பல முக்கிய நிகழ்வுகளுக்கு ரஜினிகாந்த் இந்த மண்டபத்தைப் பயன்படுத்தி வந்தார். தனக்கு இஷ்டமான ராகவேந்திரரின் பெயரை வைத்து 90 களில் ரஜினிகாந்த் கட்டிய இந்தத் திருமண மண்டபம் விரைவில் நட்சத்திர ஹோட்டலாக மாறவிருக்கிறது.

இது தொடர்பாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல் இங்கே...

ராகவேந்திரா திருமண மண்டபம்

''சுமார் ரெண்டு ஏக்கர் அளவுள்ள இந்த இடத்தை ரஜினி வாங்க நினைத்தபோதே போட்டி வந்தது. பிரபலமான உடையார் குடும்பமும் இந்த இடத்தை வாங்க ஆசைப்பட்டது. ரஜினி முதல்லயே விரும்பியதால் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் உடையார் தரப்பிடம் பேசி, இடம் ரஜினிக்குக் கிடைக்கும்படி செய்தார்.

இடம் வாங்கிய பிறகும் கூட அதில் மண்டபம் கட்ட ஆரம்பிக்கும் போதும் சில பிரச்னைகள் வரவே சில ஆண்டுகள் நிலம் சும்மாவே கிடந்தது.

ரஜினி ரசிகர் மன்ற சந்திப்பு

பிறகு எல்லாச் சிக்கல்களையும் முடித்து மண்டபத்தை கட்டி முடித்தார்.

மண்டபம் திறக்கப்பட்டது முதலே ஒருபுறம் திருமணங்கள் நடந்து வந்தாலும், ரஜினி ரசிகர் மன்றச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிற இடமாகவும் அது இருந்து வந்தது. முக்கிய முடிவுகளை எடுக்கிறபோது இங்கு வந்து விடுவார் ரஜினி.

இத்தகைய பெருமைகளைக் கொண்ட மண்டபம்தான் தற்போது இடிக்கப்பட்டு நட்சத்திர ஹோட்டலாக மாறப் போகிறது" என்கிறார்கள்.

ரஜினிக்கு ரொம்பவே நெருக்கமான ஒரு மக்கள் தொடர்பாளர் இது குறித்துக் கூறியபோது,

``நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில கிடந்தேன். தகவல் தெரிஞ்சு என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். `பையனை மண்டபத்துக்கு வரச் சொல்லுங்க'னு மட்டும் அப்பச் சொன்னார்.

ராகவேந்திரா திருமண மண்டபம்

மறுநாள் என மகன் அங்க போனான். 'சார் கொடுக்கச் சொன்னார்'னு ஒரு பெரிய தொகை நிரப்பப்பட்ட செக் கொடுத்தாங்க. சத்தமில்லாம நிறைய உதவிகள் கிடைச்சிட்டிருந்த இடம்ங்க அது... இப்போ மண்டபம் ஹோட்டலா மாறுதுங்கிறதுல கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு'' என்கிறார்.

அடுத்த சில மாதங்களில் மூன்று நட்சத்திர ஹோட்டலின் கட்டுமானப் பணிகள் அங்கு தொடங்கப்படலாமென தெரிகிறது.

Sivakarthikeyan: "இதுக்கு போய் சீரியஸாக ரிப்ளை பண்றீங்க.!" - வெங்கட் பிரபு பதிவும், SK பதிலும்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது. கங்கை அமரன், அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என... மேலும் பார்க்க

Dorothy: "சிலர் படம் பார்க்காமல் தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பிவிடுறாங்க.!"- கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் கடந்த செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இ... மேலும் பார்க்க

Don't Trouble The Trouble: "இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை... நடித்ததும் இல்லை!"- ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

"இந்தப் படத்தை பார்க்கும் போது நான் அழுதேன்.!'- 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் குறித்து ராஜமௌலி

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

Suriya: "அது ஜோதிகாவின் 20 வருட பக்கெட் லிஸ்ட்!" - 20ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் பற்றி சூர்யா

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு - மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ... மேலும் பார்க்க

"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க