செய்திகள் :

சிறுமியின் தாயார் கொடுத்த புகார்! - ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு

post image

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கைப் பதிவு செய்திருக்கிறது சென்னை காவல்துறை.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனர் வீரமணி மீதான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் வீரமணி
தொழிலதிபர் ஜெம் வீரமணி

இவ்வழக்கை விரைவாகவும் நடுநிலையாகவும் விசாரிக்க டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில், பி.சி. தேன்மொழி தலைமையில் பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தனது மகள் வீரமணியால் பாலியல் துன்புறுதலுக்கு உள்ளானதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரமணி மீது, தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெம் வீரமணி வழக்கு – மேல் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு – பொது மக்கள் தகவல் அளிக்க வேண்டுகோள்

ஜெம் வீரமணி வழக்குகள் தொடர்பாக புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் இவ்வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள், உண்மைகள், ஆவணங்கள் அல்லது பிற முக்கிய விவரங்கள் ஏதேனும் தெரிந்திருப்பின், அவற்றை சம்மந்தப்பட்ட நபர்கள் 9345319676 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகவோ, Whatsapp மூலமாகவோ அத்தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், பெறப்படும் அனைத்து தகவல்களும் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.!

``தேர்தல் ஆணையர் மாற்றம் தீர்வாகாது" - அமைச்சர் ராஜ் மோகன்; காங்கிரஸிடமிருந்து முரண்படுகிறதா தவெக?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து ... மேலும் பார்க்க

'தவெகவுடன் நெருக்கம் காட்டும் சினிமா பைனான்சியர் அன்புச் செழியன்?' - பின்னணி என்ன?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க மதுரை சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். மதுரையில் முதல்வர் கால் பதித்தவுடனேயே அவரை நேரில் சந்தித்திருக்கிறார் பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன். அத... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி: 'விஜய், ஆதவ் , சி.டி.ஆருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்' - டி.ஆர் பாலு புகார்

ஜெம் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகிய மூவரையும் 'சம்மன்' செ... மேலும் பார்க்க

மதுரை: மும்மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு முதலாவதாக தங்க மோதிரம் வழங்கிய முதல்வர் விஜய்!

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடங்கி இருக்கிறது. திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார் முதலமைச்சர் விஜய்.இதற்கு முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து, ம... மேலும் பார்க்க

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூர... மேலும் பார்க்க

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுர... மேலும் பார்க்க