செய்திகள் :

மதுராந்தகம்: மாற்றுத்திறனாளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; கும்பலைத் தேடும் போலீஸ்!

post image

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் மகள், அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவரால் நடக்க முடியாது. மாற்றுத்திறனாளியான மாணவி, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மாணவியை மிரட்டி பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டிருக்கிறார். உடனே மாணவி சத்தம் போடாமலிருக்க அவரின் வாயை துணியால் பொத்தியிருக்கிறது கும்பல். பின்னர் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. தனக்கு நடந்த கொடுமையால் கதறி அழுத மாணவி, பெற்றோர் வந்த பிறகு விவரத்தைக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இந்தச் சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

பாலியல் தொல்லை

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவியிடம் விசாரித்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாணவியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுராந்தகம் மாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடூரத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில் மாணவியின் பெற்றோரைச் சந்திக்க சில சமூக நல ஆர்வலர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. எனவே மாணவி விவகாரத்தில் செங்கல்பட்டு போலீஸார் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் விடுத்திருக்கிறார்கள்.

கணவரின் 2வது திருமணத்துக்கு எதிர்ப்பு; ஒன்றரை ஆண்டுக்குப்பின் எலும்புகள் மீட்பு - சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி என்பவரும் கடந்த 2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மக... மேலும் பார்க்க

`ரூ.200 சம்பளம்' - போதைப்பொருள் விற்பனை செய்ய 15 வயது சிறுவனை வேலைக்கு வைத்த மும்பை பெண் | அதிர்ச்சி

மும்பையில் சிறுவர்களைக்கூட போதைப்பொருள் விற்பனை செய்ய பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மும்பை தேவ்னார் பகுதியில் இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவண்டி பக... மேலும் பார்க்க

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை? பரவிய தகவல்; வெடித்த கலவரம்! - என்ன நடந்தது?

பஞ்சாப்பில் உள்ள பக்வாராவில் இருக்கிறது லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழக மாணவர்களிடையே சமூக வலைதளப் பதிவு ஒன்று அதிகம் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அந்தப் பல்கலைக்கழக ஹாஸ்டலில் ப... மேலும் பார்க்க

`எங்களை யாரும் பாலியல் கொடுமை செய்யவில்லை; எல்லாம் கட்டுக்கதை'- பஞ்சாப் பல்கலை., மாணவிகள் விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வரா என்ற இடத்தில் இருக்கும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரு மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அதில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும... மேலும் பார்க்க

எம்.டி.எம்.ஏ வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆசிரியை; காவல் நிலைய வளாகத்தில் கத்தியால் குத்திய நபர்!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரையில் எம்.டி.எம்.ஏ விற்பனை செய்த வழக்கில் பேராம்பிறா பி.ஆர்.சி சிறப்பு பள்ளி ஆசிரியை கீர்த்தனா, செறுவளூர் பள்ளி ஆசிரியை காவ்யா, கீர்த்தனாவுடன் சிறப்புப் பள்ளியில... மேலும் பார்க்க

’சினிமாவை மிஞ்சிய சேஸிங்’-கார் மேற்கூரையில் 40கி.மீ தொங்கியபடி சென்று கடத்தல் கும்பலை பிடித்த போலீஸ்

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவல் துறையினர், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத... மேலும் பார்க்க