செய்திகள் :

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்றம்

post image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சுர்ஜித், அவருடைய பெற்றோர்களும் காவலர்களுமான  சரவணன் - கிருஷ்ணகுமாரி மற்றும் அவர்களது உறவினர் ஜெயபால் ஆகிய நான்கு பேரும் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கவின் கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தடய அறிவியல் ஆவணங்கள் மற்றும் உயிரிழந்த கவினின் காதலி, பெற்றோர் உள்பட 83 சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கிய சுமார் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்றம் கிளை
மதுரை உயர்நீதிமன்றம் கிளை

இந்த நிலையில், தங்கள் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தும், ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

`'மாமா' என்று நீ அழைத்த நபர் உனக்கு மிக மோசமான செயலைச் செய்தார்; ஆனால் நீ..!' - நெகிழ வைத்த தீர்ப்பு

டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சுமித் என்பவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்க... மேலும் பார்க்க

`2,700 மதிப்புள்ள புற்றுநோய் மருந்து 27,000-க்கு விற்பனை; இது பகல்கொள்ளை'- உச்ச நீதிமன்றம் கண்டனம்!

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்துவது குறித்த வழக்கின் விசாரணையின்போது, மருந்து நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் அநியாய லாபக் கொள்ளையைச் சுட... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு அவகாசம்; `ஜாமீன்' இடைக்காலத் தடை நீடிப்பு: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே.ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், ஜாமீனில் வெளிவந்துள்ள குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து அவர்களை மீண்டும் காவலில் அடைக்கக் கோரும் சி.பி.ஐ-யின் கோரி... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: "வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல்" - உயர் நீதிமன்றம்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல... மேலும் பார்க்க

அஜித்குமார் காவல் மரணம்: திருப்புவனம் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு; சிக்கியது எப்படி?

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல் மரண கொலை வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமா... மேலும் பார்க்க

மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட நால்வர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்பவர் நகை திருட்டு புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அஜித்குமாரைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தா... மேலும் பார்க்க