செய்திகள் :

"2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" - உதயநிதி

post image

தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம்
க்ரைம்

இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட போட்டியில் அஜித் என்னும் இளைஞரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூரமும் அரங்கேறியுள்ளது.

குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு சாட்சியாக, பரமக்குடியில் பெண் காவலர் கண்ணகி, கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்து இருக்கிறார்.

இது தவிர, மயிலாடுதுறை - திருவண்ணாமலை - சேலம் - கன்னியாகுமரி - தேனி கூடலூர் எனக் கடந்த 2 நாட்களில் மட்டும் 9 கொலைகள் நடந்து இருக்கின்றன.

இப்படிக் கொத்துக்கொத்தாகக் கொலைகள் நடந்து கொண்டிருக்க, யாருக்குமே பாதுகாப்பற்ற இந்த Reels ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதலமைச்சர்?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இனியும் மிக்சர் சாப்பிட்டிக் கொண்டிருக்காமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

"நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து ... மேலும் பார்க்க

``அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக, தவெக, அதிமுக என மூன்று கட்சிகளும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையில் பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி, தவெக மற்றும் முதல்வர் விஜய் ... மேலும் பார்க்க

"தவெக அரசு 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக்கிவிட்டது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வழங்கும்போது மின்வெட்டு ஏற்பட்டு மருத்துவமனை அதிகாரிகள் மொபை... மேலும் பார்க்க

வருசநாடு 98 கிராம மக்கள் போராட்டம்: ``ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா?" - சீமான் கேள்வி

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி, கீழபூசனூத்து, மேலபூசனூத்து‌ உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற... மேலும் பார்க்க

"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனி எவரும் வாய் திறக்கக் கூடாது" - டாக்டர் கிருஷ்ணசாமி

"மாட்டுக் கறி குறித்து தமிழகத்தில் இனிமேல் எவரும் வாய் திறக்காத அளவிற்கு, எங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடும் உற்சாகத்தோடும் நடக்கும்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரி... மேலும் பார்க்க

மேகதாது அணை: "தனக்குத் தானே பட்டம் சூட்டி கொண்ட தாய் மாமா என்ன செய்யப் போகிறார்?" - எடப்பாடி காட்டம்

கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கும் படி மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ச... மேலும் பார்க்க