செய்திகள் :

"தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்"- டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

post image

டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே நடுரோட்டில் ஒரு பெண் படுத்துக்கொண்டு தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் தன்னைச் சந்தித்துக் கட்டிப்பிடிக்கும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார்.

வினோதமான இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவை சையத் கமர் அலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்ய போலீஸார் முயன்றனர்.

ஆனால் அப்பெண் போலீஸார் கேட்டுக்கொண்ட பிறகும் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து சாலையில் அமர்ந்தும், படுத்தும் பிரச்னை பண்ணிக்கொண்டிருந்தார்.

தமிழக முதல்வர் விஜய் வந்து தன்னை கட்டிப்பிடிக்காதவரை இங்கிருந்து நகர்மாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் அவரை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது அந்த பெண் அதனை எதிர்த்து, "என்னைத் தொடாதே, இது என் உரிமை" என்று கூறினார். அதனை வீடியோ எடுத்தவர் அந்தப் பெண்ணிடம், சாலையில் இருந்து பயணிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் ஏன் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறாய் என்று அவரிடம் கேள்வி கேட்டார்.

இச்சம்பவம் தொடர்பான அப்பெண்ணின் இந்த வீடியோ ஆன்லைனில் வெளியானதைத் தொடர்ந்து அப்பெண்ணின் செயல் குறித்து பலரும் விமர்சித்துள்ளனர்.

ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ''அந்தப் பெண் விஜய்க்காகக் காத்திருக்க விரும்பினால், டெல்லிக்குப் பதிலாக சென்னையில் காத்திருந்திருக்கலாம்'' என்று கிண்டலாகப் பரிந்துரைத்தார். சிலர் இந்தப் பிரச்னையைக் கையாண்ட போலீஸாருக்காகத் தங்களது அனுதாபத்தைத் தெரிவித்தனர்.

வழக்கத்திற்கு மாறான முறையில் அந்தப் பெண் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்திக்க முயன்றதால் இந்தச் சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் எதற்காக அந்தப் பகுதியில் இது போன்று நடந்து கொண்டார் என்பது குறித்து அல்லது அவர் மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை.

ஐநா: `சர்வதேச உச்சி மாநாட்டில் ஒலித்த தமிழரின் குரல்' - யார் இந்த சதீஷ் குமார்?

ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த த... மேலும் பார்க்க

குரோர்பதி படப்பிடிப்பில் அமிதாப்பச்சன் கீழே விழுந்து காயம் - `ஓய்வு' குறித்து நச் கமென்ட்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த அமிதாப்பச்சன் அதிலிருந்து மீண்ட... மேலும் பார்க்க

"அதிஷ்ட தேவதை ஒருநாள் வாழவைப்பாள் என நம்பினேன்; ஆனால்..."- 5 மூட்டை லாட்டரி வாங்கி ஏழையான ராகவன்!

அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்ற ஒற்றை ஆசையினால், கடின உழைப்பால் ஈட்டிய வருமானம், பூர்வீக நிலம் மற்றும் நகைகள் என சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமான தொகையை லாட்டரி சீட்டுகளுக்காகவே... மேலும் பார்க்க

பெங்களூரு: ஆட்டோ கட்டணம் செலுத்துவதில் தகராறு; டிரைவருடன் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்; வீடியோ வைரல்

பெங்களூருவில் இரண்டு இளம்பெண்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கியவுடன் ஆட்டோவில் பயணம் செய்ததற்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவருக்கும், அப்பெண்களுக்கும் இடையே ... மேலும் பார்க்க

முதலைகள் நிறைந்த ஆற்றில் 25 கி.மீ நீச்சல் - 75 வயது பாட்டியின் உயிர் தப்பிப்பதற்கானப் போராட்டம்!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 75 வயதான கேஷி தலாய்.தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், சனிக்கிழமை இரவு வழக்கம்போல குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், வீட்டின் அருகி... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்திற்கு மசூதி இடிப்பு: லத்தி சார்ஜ், கண்ணீர் புகைக்குண்டால் கூட்டத்தை கலைத்த போலீஸார்

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஷாஹி மசூதியை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த போராட்டத்தில் கல் வீசப்பட்டது. அங்குள்ள் கந்தல் சதுக்கத்தில் இருந்து கோபால் மந்திர்... மேலும் பார்க்க