செய்திகள் :

Sigma: "அவர் கண்டிப்பாகப் பெருமைப்படுவார்!" - 'சிக்மா' குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய்

post image

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sigma Movie Stills
Sigma Movie Stills

ராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக, மலையாளத்தில் பியர்லி மானி நேர்காணலில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய், தனது முதல் படம் குறித்து அப்பா விஜய் என்ன மாதிரியான கருத்து தெரிவிப்பார் என்பது குறித்து பேசியுள்ளார்.

ஜேசன் சஞ்சய், "அப்பா பொதுவாகவே அமைதியான மனிதர். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் யோசித்து முடிவெடுக்க அவருக்குச் சிறிது நேரம் தேவைப்படும்.

Jason Sanjay
Jason Sanjay

நான் ஏதேனும் கேள்வி கேட்டால் கூட, பதில் சொல்ல 10 நொடிகள் எடுத்துக்கொள்வார். அவர் அமைதியாக இருந்தால், 'கால் கட் ஆயிடுச்சா அப்பா?' என்று கூடக் கேட்பேன்.

'பொறுமையாக யோசித்து, ஒரு முடிவுக்கு வந்து பிறகு எனக்கு போன் செய்யுங்கள், இமெயில் அனுப்புங்கள் அல்லது பேசுங்கள்' என்பேன். ஆனால் நிச்சயம் அவருக்கு 'சிக்மா' படம் பிடிக்கும், அவர் கண்டிப்பாகப் பெருமைப்படுவார்" என்று பேசியிருக்கிறார்.

Pocket Novel: "உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் தனித்துவமானது" - விஜய் சேதுபதி குறித்து மாளவிகா

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இவர் ... மேலும் பார்க்க

Sigma: "சின்ன பையன் சஞ்சய் இப்போ இயக்குநர் ஆகிட்டார்" - ஜேசன் சஞ்சயை வாழ்த்திய சூர்யா & ஜோதிகா

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இ... மேலும் பார்க்க

Sigma: "பிரமாண்ட கடலில், அறிமுக இயக்குநராக எனது பயணத்தைத் தொடங்குகிறேன்!" - நெகிழும் ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் ... மேலும் பார்க்க

பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!

இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால் ஏரியாவில் அத்தனை வயதினரும் பயப்படுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் ச... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?

தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும்... மேலும் பார்க்க

பத்தா: ``சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லீ தயாரித்திரு... மேலும் பார்க்க