செய்திகள் :

Sigma: "சின்ன பையன் சஞ்சய் இப்போ இயக்குநர் ஆகிட்டார்" - ஜேசன் சஞ்சயை வாழ்த்திய சூர்யா & ஜோதிகா

post image

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

'சிக்மா'
'சிக்மா'

இந்தப் படத்திற்கும், ஜேசன் சஞ்சய்யின் அறிமுகத்திற்கும் வாழ்த்து தெரிவித்து சூர்யாவும், ஜோதிகாவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஜேசன் சஞ்சய்யை வாழ்த்திய ஜோதிகா, "அன்புள்ள ஜேசன் சஞ்சய் மற்றும் படக்குழுவினருக்கு, 'சிக்மா' திரைப்படத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பட விளம்பரங்களை மிகுந்த மகிழ்ச்சியோடு பார்த்து வருகிறேன்.

நீங்கள் இவ்வளவு முதிர்ச்சியாக, அமைதியாக, இயல்பாக இருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பெற்றோருக்கு ஒரு சிறந்த மகனாக வளர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, ஒவ்வொரு வெற்றியையும் நீங்கள் பெற முற்றிலும் தகுதியானவர் என்று தோன்றுகிறது.

உங்களுக்கும் முழு படக்குழுவிற்கும் திரைப்படம் சிறப்பான முறையில் வெளியாக வாழ்த்துகள். இறைவன் உங்களை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

சூர்யா, "உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்! சின்ன பையன் சஞ்சய் இப்போது இயக்குநராகிவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை.

நாளைக்கு பெரிய நாள். மனமார்ந்த வாழ்த்துகள்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

Sigma: "பிரமாண்ட கடலில், அறிமுக இயக்குநராக எனது பயணத்தைத் தொடங்குகிறேன்!" - நெகிழும் ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் ... மேலும் பார்க்க

பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!

இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால் ஏரியாவில் அத்தனை வயதினரும் பயப்படுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் ச... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?

தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும்... மேலும் பார்க்க

பத்தா: ``சிறுவன் சாய் பிரிதிவ்ராஜ் தேசிய விருதுக்கு தகுதியானவன்" - இயக்குநர் ஷங்கர் பாராட்டு

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் அட்லீ தயாரித்திரு... மேலும் பார்க்க

"டோரதி, பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார்கள்"- பாராட்டிய சூர்யா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை: ``ஐந்து ஆறு முறை பார்த்துவிட்டேன்; ஆனாலும்.."- இயக்குநர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ’பேரன்பு’, ’பறந்து போ’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்... மேலும் பார்க்க