செய்திகள் :

Asian games: ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியா; மல்யுத்தத்தில் வெள்ளி Roundup

post image

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 13-வது நாளில், இந்தியா இரண்டு முக்கிய குழுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன், மொத்தம் 6 பதக்கங்களையும் வென்றுள்ளது. ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பாகிஸ்தானை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல், ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கை அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கம் வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இதில் 10 தங்கம், 22 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது 8-வது இடத்தில் உள்ளது.

கடைசி நிமிடத் த்ரில்: பாகிஸ்தானை வீழ்த்திய ஹாக்கி அணி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில், தொடக்கத்தில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்து ஆட்டத்தை 3-3 என சமன் செய்தது.

Asian games

வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய கடைசி நேரத்தில், ஆட்டம் முடிவடைய 49.2 விநாடிகள் மட்டுமே இருந்தபோது அபிஷேக் கோல் அடித்து இந்தியாவை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தார். இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்களை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேற்றம்

ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகமான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். முடிவில் இலங்கை அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, தங்கப்பதக்கத்திற்காக பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

மல்யுத்தம் மற்றும் பிற போட்டிகளில் பதக்கங்கள்

ஆடவர் கிரிகோ-ரோமன் 97 கி.கி பிரிவில் நிதேஷ் சிவாக் வெள்ளிப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் மங்கோலியாவின் கன்குயாக் கன்படாமை 9-0 என்ற கணக்கில் வீழ்த்திய நிதேஷ், இறுதிப்போட்டியில் ஜப்பானின் யூரி நகசடோவிடம் 0-4 எனத் தோல்வியடைந்தார். இதன் மூலம் கிரிகோ-ரோமன் மல்யுத்த வரலாற்றில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

Asian games

மேலும், செய்லிங் ஆடவர் ஸ்கிஃப் பிரிவில் பிரின்ஸ் நோபிள் குரிமிங்கல் - மனு பிரான்சிஸ் ஜோடி வெள்ளி வென்றது. காம்பவுண்ட் ஆர்ச்சரி தனிநபர் பிரிவில் கணேஷ் மணி ரத்னம் திருமூரு வெண்கலப் பதக்கம் வென்றார். ஸ்காஷ் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கலம் வென்றன. மல்யுத்தம் மகளிர் 62 கி.கி பிரிவில் மான்சி அஹ்லாவத் வெண்கலம் வென்றார்.

இன்றைய போட்டி அட்டவணை

அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பல பதக்க வாய்ப்புகள் உள்ளன. குத்துச்சண்டை மகளிர் 75 கி.கி இறுதிப்போட்டியில் லவ்லினா போர்ஹோகைன், மகளிர் 65 கி.கி பிரிவில் பர்வீன், ஆடவர் 80 கி.கி பிரிவில் அன்குஷ் பங்கல் ஆகியோர் களமிறங்குகின்றனர். மேலும், மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது.

Asian games

இதுதவிர, ரிகர்வ் ஆர்ச்சரி மகளிர் அணி, கலப்பு அணி மற்றும் ஆடவர் அணிப் பிரிவுகளில் இந்தியா அரையிறுதி மற்றும் பதக்கச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கிறது. ஃபிரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவில் திபாஷி, ரஜத் ருஹால், பிரியா மாலிக், சுஜீத் ஆகியோரும் பதக்கத்திற்காகக் களமிறங்க உள்ளனர்.

Asian Games: `இரட்டை வெண்கலம்' சர்வேதேச அரங்கில் சாதித்து அசத்திய தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு வெண்கலப் ... மேலும் பார்க்க

Asian Games 2026 : வித்யா ராம்ராஜ் டு ஷமீனா ரியாஸ்! பதக்கம் வென்று ஜொலித்த தமிழ்நாட்டின் தங்கமகள்கள்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரங்களில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பதக்கங்களும... மேலும் பார்க்க

`400+ எனும் ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம்!' - மெகா சேஸிங் ரகசியம் பகிரும் கில்

நேற்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியா ஒரு" Historical" நிகழ்வை நிகழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் 'சுப்மன் கில்' அடித்த இரட்டைசதம். போட்டியின் பிறகு சுப்மன் க... மேலும் பார்க்க

கில் : ‘வந்தான்’ ‘அடிச்சான்’ `ரெக்கார்டு’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசி புதிய சாதனை படைத்ததுடன், 406 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கையும் இந்தியா அசால்ட்டாக சேஸ் செய்திருக்கிறது. கில்லின் வரல... மேலும் பார்க்க

Asian games: ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள்; ஹாக்கியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் - Ind Round up

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச்சுற்று நெருங்கிவரும் நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற போட்டிகளில் வில்வித்தையில் (Compound Archery) மூன்று தங்கம் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் (Shooting)... மேலும் பார்க்க

Asian Games: "ஆட்டோ ஓட்டுநரின் மகள்தானே...” - வெள்ளிப் பதக்கத்துடன் பதிலடி கொடுத்த ஆன்சி!

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கும் கேரளாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் ஆன்‌சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கனமழை உள்ளிட்ட சாதகமற்ற வானிலையையும் பொ... மேலும் பார்க்க