செய்திகள் :

பெரம்பலூர்: பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் தூங்கியவர்கள் மீது ஏறிய ஜே.சி.பி; இருவர் பலியான சோகம்!

post image

பெரம்பலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பார்க்கிங் பகுதியில், தூங்கிக் கொண்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது எதிர்பாராதவிதமாக ஜேசிபி வாகனம் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் சோரி (வயது: 25) மற்றும் டக்கீஸ்வர் (வயது: 21) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக போர்வெல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், காலை தம்பிரான்பட்டியைச் சேர்ந்த ஜே.சி.பி ஓட்டுநர் சந்தோஷ் ராஜ் வாகனத்தை இயக்க முற்பட்டபோது, அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஏறியதாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர்

தகவலறிந்து வந்த செஞ்சேரி ஊரகப் காவல் நிலைய போலீஸார், விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்க் பார்க்கிங்கில் தூங்கிய இரு வடமாநில இளைஞர்கள் மீது ஜே.சி.பி வாகனம் ஏறி விபத்தான நிலையில், அவர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர்: நெஞ்சு எரிச்சலுக்கு மாத்திரை வாங்க வந்த நபர்; மெடிக்கல் ஷாப் வாசலிலேயே உயிரழந்த சோகம்

திருவாரூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 44 வயதான சாமிநாதன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சாமிநாதன் அப்பகுதியில் கேபிள் டி.வி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ... மேலும் பார்க்க

மும்பை: மலை உச்சியில் காரை ஓட்டிய சிறுவன்; 70 அடி உயரத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்து விபத்து!

மும்பை பேலாப்பூர் பகுதியில் உள்ள பார்சிக் மலையில் சின்மயி பாட்டீல் என்ற 17 வயது சிறுவன் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். கார் மலையில் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் ... மேலும் பார்க்க

பெரம்பலூர்: ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்... 4 பேர் பலியான சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 38). இவரது நண்பர்கள், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(வயது: 30), முதுகுளத்தூர் கார்த்திக் (வயது: 38), காளீஸ்வ... மேலும் பார்க்க

தீப்பிடித்த சுற்றுலா பஸ்; தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் பலியான சோகம்; ஜன்னல் வழியாகத் தப்பிய பயணிகள்

சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ஸ்கூட்டியில் சென்ற ஆசிரியர்கள் மீது மோதிய லாரி; உடன் சென்ற மாணவனுக்கும் நேர்ந்த சோகம்

மாலை பள்ளி முடிந்தது. உற்சாகமாகப் பேசிக்கொண்டு கிளம்பிய மூன்று பேர் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தால் உயிரற்ற உடல்களாக மருத்துவமனை பிணக்கூராய்வுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது பார்ப்ப... மேலும் பார்க்க

மும்பை: கடற்கரை சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த பி.எம்.டபிள்யூ கார்: 3 மாணவர்கள் பலி

மும்பையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடற்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சாலை கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று, மெரைன்... மேலும் பார்க்க