செய்திகள் :

'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்...' - கண்ணீருடன் கவினின் தாய்!

post image

கவினின் ஆணவப்படுகொலை வழக்கில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களின் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கச் சொல்லி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

காத்திருப்புப் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்
காத்திருப்புப் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் கவினின் பெற்றோர் அவர்களின் வீட்டுக்கு வெளியே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவினின் அம்மா ஆசிரியை தமிழ்ச்செல்வியை தொடர்புகொண்டு இது சம்பந்தமாகப் பேசினோம், ''கவினை கொலை பண்ணதுல சுர்ஜித்தோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தொடர்பு இருக்குற ஆதாரமே இல்லைன்னு சொல்லி, அவங்க பெயர்களை குற்றப்பத்திரிகையில இருந்து நீக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு. இந்த உத்தரவை எப்படிங்க ஏத்துக்க முடியும்? சுர்ஜித்துங்குற 22 வயசு பையன் எந்த தூண்டுதலும் இல்லாம அவனா வந்து என் பையனை வெட்டி போட்டானா? சம்பவம் நடந்தப்போ சுர்ஜித்தோட அப்பா இராஜபாளையத்துல இருந்ததா சொல்றாரு. ஆனா, அவரு கவின் செத்துக் கிடந்த இடத்துல அதை பார்க்க நிக்குறவங்களோட நிக்குற வீடியோ இருக்கு.

கவினின் பெற்றோர்
கவினின் பெற்றோர்

இராஜபாளையத்துல இருந்து அவ்வளவு சீக்கிரமா இங்க வர முடியுமா? இன்னைக்கு அவங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பு இல்லைன்னு தீர்ப்பு கொடுக்குறாங்க. நாளைக்கு சுர்ஜித்தே கொலை பண்ணல. நடந்தது ஆணவக்கொலையே இல்லைன்னு சொல்லுவாங்க. புள்ளையை பறிகொடுத்துட்டு நாங்க இங்க ஒவ்வொரு நிமிசத்தையும் நரகத்துல வாழுற மாதிரி நகர்த்திக்கிட்டு இருக்கோம். நான் ஒரு டீச்சரு. நாலு புள்ளைங்களுக்கு பாடம் நடத்துற நான் சாதி, மதம்னு புள்ளைங்களுக்கு சொல்லி வளர்த்தது இல்ல. கவினை பத்தி ஊருக்குள்ள கூட கேட்டுப் பாருங்க. அவன் சூது வாது தெரியாத நல்ல பையன். அந்த அப்புராணி பயலை ஏமாத்தி கூட்டிட்டு போயி இவனுக கொலை பண்ணிருக்காணுக. என் புள்ளையைத்தான் இழந்துட்டேன். எனக்கு ஒரு நீதியைவாச்சு வாங்கி கொடுங்க. இந்த கொலையில சம்பந்தப்பட்ட யாரையும் விடாதீங்க. தமிழக அரசு இந்த வழக்குல மேல் முறையீடு செய்யணும். மறுவிசாரணை கண்டிப்பா நடத்தணும். விசாரணை முறையா நடத்தப்படாம சுர்ஜித் பெற்றோர் பெயர்கள் நீக்கப்பட காரணமா இருந்தவங்களை கண்டுபிடிக்கணும். இந்த சமூகத்துக்கு ஒரு கவின் போதும். உறுதியா நடவடிக்கை எடுத்து மத்த புள்ளைங்களை காப்பாத்துங்க" என கண்ணீர் மல்க பேசினார்.

கவின் பெற்றோரின் கோரிக்கையை தமிழக அரசு கவனிக்குமா?

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக... மேலும் பார்க்க

`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மேடையில் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றும்போது அழுதார். அது குறித்து பேசிய தமீமுன் அன்சாரி, `தாராபுரத்தில் நடைபெ... மேலும் பார்க்க

``அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு நான் தரும் மதிப்பெண் ஜீரோ..!" - கீதாஜீவன் ஓபன் டாக்!

தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக, ராஜபாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ, ஜெகதீஸ்வரி பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து, தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விழா மேடையில் ம... மேலும் பார்க்க

`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' - நயினார் நாகேந்திரன்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. நேற்று முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாய் தவறி, பா.ஜ.க-வின் ஒரு பிரிவுதான் தவ... மேலும் பார்க்க

வற்றிய மதுரை வண்டியூர் தெப்பக்குளம்; குப்பைகளால் மாசு; சுத்தம் செய்யப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட வண்டியூர் தெப்பக்குளம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வறட்சி நிலையை எட்டியிருக்கிறது. மதுரையில் கி.பி. 1645 ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாய... மேலும் பார்க்க

புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! - தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் `லிஃப்ட்' தருவதாகக் கூறி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளி மீது நடவடிக்க... மேலும் பார்க்க