செய்திகள் :

மும்பை: மலை உச்சியில் காரை ஓட்டிய சிறுவன்; 70 அடி உயரத்திலிருந்து தண்டவாளத்தில் விழுந்து விபத்து!

post image

மும்பை பேலாப்பூர் பகுதியில் உள்ள பார்சிக் மலையில் சின்மயி பாட்டீல் என்ற 17 வயது சிறுவன் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். கார் மலையில் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகியது. இதனால் மலைப்பாதையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கார் விழுந்தது. மலையில் 70 அடி பள்ளத்தில் ரயில் தண்டவாளம் இருக்கிறது. கார் அந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. காரில் இருந்த ஏர் பேக் விரிவடைந்து பாட்டீல் பின் இருக்கையில் தூக்கி வீசப்பட்டார். கார் தண்டவாளத்தில் விழுந்ததால் பாட்டீலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாட்டீல் சான்பாடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பரிடம் காரை வாங்கிக்கொண்டு பார்சிக் மலையை சுற்றிப்பார்க்க சென்ற போது இச்சம்பவம் நடந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி ரஷ்கர் கூறுகையில், ''மைனர் சிறுவன் காரை மலை உச்சியில் நிறுத்தி இருந்தார். திரும்ப வர காரை எடுத்தபோது பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்துவிட்டான். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்தது'' என்று தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களும் அப்பகுதி மக்களும் சேர்ந்து காரை தண்டவாளத்தில் இருந்து வெளியில் தள்ளிச் சென்றனர். இச்சம்பவத்தால் அந்த வழியாக வந்த ரயில் ஒன்று சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் வராது என்பதால் பெரிய அளவில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸாரின் விசாரணையில் அந்த மைனர் ஓட்டிய கார் பாட்டீலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பாட்டீல் தனது நண்பர் ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி காரை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பாட்டீல் கார் வாங்கியது அவரது பெற்றோருக்கும் தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

பெரம்பலூர்: ஆம்னி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான கார்... 4 பேர் பலியான சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது: 38). இவரது நண்பர்கள், பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன்(வயது: 30), முதுகுளத்தூர் கார்த்திக் (வயது: 38), காளீஸ்வ... மேலும் பார்க்க

தீப்பிடித்த சுற்றுலா பஸ்; தூங்கிக்கொண்டிருந்த 9 பேர் பலியான சோகம்; ஜன்னல் வழியாகத் தப்பிய பயணிகள்

சுற்றுலா பஸ் ஒன்று நேற்று இரவு டெல்லி நொய்டாவில் இருந்து கிளம்பி உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பஸ் கிரேட்டர் நொய்டாவில் யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சென்று ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ஸ்கூட்டியில் சென்ற ஆசிரியர்கள் மீது மோதிய லாரி; உடன் சென்ற மாணவனுக்கும் நேர்ந்த சோகம்

மாலை பள்ளி முடிந்தது. உற்சாகமாகப் பேசிக்கொண்டு கிளம்பிய மூன்று பேர் கண் இமைக்கும் நேரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தால் உயிரற்ற உடல்களாக மருத்துவமனை பிணக்கூராய்வுக் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது பார்ப்ப... மேலும் பார்க்க

மும்பை: கடற்கரை சாலை தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்த பி.எம்.டபிள்யூ கார்: 3 மாணவர்கள் பலி

மும்பையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடற்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த சாலை கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் ஒன்று, மெரைன்... மேலும் பார்க்க

சோளிங்கர்: பேருந்து மோதி விபத்து - தந்தை, மகள் பலியான சோகம்!

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 47). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுமிதா (21). இவர் அங்குள்ள கல்லூரியில் பயின்று வந்தார். சுரேஷ் பாபுவின் ... மேலும் பார்க்க

மதுரை : நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சோகம்!

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு கவின் நர்சரியை சேர்ந்தவர் சிமியோன் மகன் ஜெப பாஸ்டின் (வயது 29) காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்திண்டுக்கல் மாவட்டம் காமலாபுரம் சக்கையா நாயக... மேலும் பார்க்க