செய்திகள் :

ஸ்மித் மிச்சாருக்குக் கத்திக்குத்து, விபரீதத்திற்குக் காரணமான விமானி யார்? - இதுவரை கிடைத்த தகவல்கள்

post image

‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) துபாய் நேரப்படி, காலையில் துபாயிலிருந்து கிளம்பியுள்ளது.

இந்த விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ்வை நோக்கிப் பறந்திருக்கிறது. இந்த விமானத்தில் 174 பேர் பயணித்திருக்கின்றனர். அதில் பெரும்பான்மையானவர்கள் இஸ்ரேலியர்கள்.

விமானப் பயணம் தொடங்கிய கிட்டத்தட்ட 2 மணிநேரத்தில், விமானம் பறந்த தளத்திலிருந்து கீழே இறங்கியிருக்கிறது.

அந்த விமானத்திலிருந்து பொது அவசரக் கோடான 7700 சிக்னல் வந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களிலேயே விமானக் கடத்தல், விமான ஆக்கிரமிப்புக் கோடான 7500 ஆகச் சிக்னல் மாறியுள்ளது.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்

ஏன் இந்தச் சிக்னல்கள்... இந்த விமானத்தில் என்னதான் நடந்தது?

குறிப்பிட்ட இந்த ஃபிளைதுபாய் விமானத்தின் விமானிகளில் ஒருவர் இந்தியர். இவர் ஸ்மித் மச்சார். இவர் முதன்மை விமானியும் கூட.

இன்னொரு விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவரால்தான் விமானத்தில் அத்தனைப் பிரச்னையுமே.

விமானப் பயணத்தின்போது, அந்த விமானத்தைத் தகர்க்கப் பார்த்திருக்கிறார் அந்த விமானி என்று கூறப்படுகிறது.

இவரைத் தடுக்க முயன்ற ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்குப் பிறகுமே, ஸ்மித் மச்சார் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க முயன்றிருக்கிறார்.

ஒருகட்டத்தில் முடியாமல் போக, காக்பிட் கதவைத் திறந்துவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து, விமானத்தில் அசம்பாவிதம் நடந்ததைத் தவிர்க்க உதவிய பிளம்பர் யானிவ் ஹாயூன் கூறியதாவது...

“நாங்கள் காக்பிட்டிற்குள் நுழைந்ததும், தாக்குதலுக்குக் காரணமான விமானி இருக்கைகளுக்கும் இடையே இருந்த கட்டுப்பாட்டுக் கருவிகளின் மீது அமர்ந்து, இயக்கக் கருவிகளைச் சேதப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

உடனே, அவரின் கழுத்தைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுவந்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் காரணமாக டெல் அவிவ்விற்குச் சென்றுகொண்டிருந்த விமானம் சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது.

இதன்பின், குற்றம் சாட்டப்படும் விமானி குறித்த எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதுதான், குற்றம் சாட்டப்பட்ட விமானி குறித்து இதுவரை கிடைத்த தகவல்கள்.

நெதன்யாகு - யானிவ் ஹாயூன்
நெதன்யாகு - யானிவ் ஹாயூன்

கோணங்கள்...

இன்னும் சில தினங்களில் அக்டோபர் 7-ம் தேதி வரை உள்ளது.

2023-ம் ஆண்டு அக்டோபர் 7 அன்றுதான் இஸ்ரேலை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு தாக்கியது.

ஒருவேளை இது ஹமாஸின் வேலையாக இருக்குமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இன்னொரு பக்கம், பிப்ரவரி மாதம் அமெரிக்கா, இஸ்ரேல் vs ஈரான் உடன் தொடங்கிய போரும் இன்னும் முடியவில்லை. அதனால், இதில் ஈரான் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்றும் விசாரணை விரிகிறது.

இஸ்ரேலின் 9/11 என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிடுகிறார். ஆக, இதில் வேறு தீவிரவாத அமைப்பிற்குத் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை: விசிக நிர்வாகி கொடூரக் கொலை; விசாரணை வளையத்துக்குள் 4 பேர்; பழிக்குப் பழியாக நடந்ததா?

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாகலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (52). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த சிவா நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 4 ப... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கல்குவாரியில் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை; குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!

பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன், வெற்றிவேல் (வயது: 27). துபாயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நண்பர்களுடன் சேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்'... தலைவிரித்தாடும் `கொலை' கலாசாரம்!

குற்றவாளிகளுக்குத் துணை நிற்கும் சட்டப் பிரிவுகள்புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் பரப்பளவு தலா சுமார் 3,700 சதுர கிலோமீட்டர்கள். அதேசமயம் காரைக்கால், மாஹே, ஏனாம் ... மேலும் பார்க்க

கவின்: `ஒரு பெண்ணை விரும்பினாங்கிறதுக்காக எங்க பிள்ளைய இப்படிக் கொல்லணுமா?' - பெற்றோர் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர், நெல்லையைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததால் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கீரை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கீரைகளை மொத்தமாக வாங்கி கூடையில் சுமந்து, தினமும் நடந்து சென்று கீரைகளை விற்று பிழைப்பு நடத்துபவர் அவர். அதன்படி நே... மேலும் பார்க்க

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க