செய்திகள் :

Asian Games: Recurve வில்வித்தையில் முதல் தங்கம்; 44 ஆண்டு கால கொரிய ஆதிக்கத்துக்கு இந்தியா முடிவுரை

post image

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் Recurve வில்வித்தை என்றாலே கடந்த 44 ஆண்டுகளாக தென் கொரியாவின் ஆதிக்கம்தான். உலக சாம்பியனான அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இந்த முறை களத்தில் இருந்த இந்திய அணிக்கு அந்த வரலாறு ஒரு தடையாகத் தெரியவில்லை.

அங்கிதா பகத், கீர்த்தி சர்மா, கும்கும் மொஹோத் ஆகியோர் இணைந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தென் கொரியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் Recurve Team பிரிவில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்றதுடன், கொரியாவின் 44 ஆண்டுகால ஆதிக்கத்துக்கும் முடிவு கட்டியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்பாக அரையிறுதியில் சீனாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது இந்திய அணி. ஆனால் இறுதிப்போட்டியில் எதிரே இருந்தது உலகின் முன்னணி வீராங்கனைகளைக் கொண்ட கொரியா. போட்டி தொடங்கியதும் இரு அணிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

முதல் இரண்டு செட்களிலும் இரு அணிகளும் விடாப்பிடியாக மோதின. கொரியா 54, 56 புள்ளிகளை எடுக்க, இந்தியாவும் அதே ஸ்கோரைப் பதிவு செய்தது. இரண்டு செட்களும் சமன் ஆனதால் 2-2 எனப் போட்டி பரபரப்பாகச் சென்றது.

மூன்றாவது செட்டில் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. கொரியாவின் ஆறு அம்புகளில் நான்கு முறை 8 புள்ளிகளே வர, இந்திய அணி 55 புள்ளிகளைக் குவித்தது. இதனால் இந்தியா முன்னிலை பெற்றது.

இனி ஒரே ஒரு செட்... இந்தியாவுக்கு 54 புள்ளிகள் கிடைத்தால் போதும். தங்கம் கைக்கு எட்டும் தூரத்தில்!

கடைசி செட்டில் கொரியா 54 புள்ளிகளை எடுத்துவிட்டது. இந்தியாவும் 54-ஐ எட்டினால்தான் தங்கம்! இந்த நிலையில் கீர்த்தி சர்மா அடித்த அம்பு முதலில் 8 எனக் கணக்கிடப்பட்டது. ஆனால் Review இல் அது 9 என மாறியதும் இந்தியாவின் ஸ்கோரும் 54-க்கு வந்தது. செட் சமநிலையில் முடிய... இந்தியாவின் தங்கம் உறுதியானது!

இந்த வெற்றியின் மற்றொரு சுவாரஸ்யம், இந்த மூவரின் பின்னணிதான். கும்கும் மொஹோத் Recurve வில்வித்தையில் பயிற்சி பெறத் தொடங்கியே மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆரம்பத்தில் மூங்கில் வில்லைக் கொண்டு பயிற்சி செய்தவர்.

கீர்த்தி சர்மாவும் Recurve வில்லைக் கையாள்வது குறித்து பல சவால்களை எதிர்கொண்டவர். ஆனால் இந்தப் போட்டியில் முக்கியமான தருணங்களில் துல்லியமான அம்புகளைச் செலுத்தி அணிக்கு புள்ளிகளைப் பெற்றுத் தந்தார்.

மறுபுறம், அங்கிதா பகத் அணியின் அனுபவம் வாய்ந்த வீராங்கனை. சர்வதேச போட்டிகளில் 23 பதக்கங்களை வென்றுள்ள அவர், ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய Recurve அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

ஹாங்சோவில் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியாத இந்திய அணி, இந்த முறை இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான கொரியாவையே வீழ்த்தியுள்ளது. ஒரே வெற்றியில் ஒரு தங்கத்தை மட்டுமல்ல... 44 ஆண்டுகளாக நீடித்த ஆதிக்கத்துக்கும் முடிவு கட்டி இந்திய Recurve வில்வித்தை மகளிர் அணி வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர்.

Asian games: ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியா; மல்யுத்தத்தில் வெள்ளி Roundup

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 13-வது நாளில், இந்தியா இரண்டு முக்கிய குழுப் போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதுடன், மொத்தம் 6 பதக்கங்களையும் வென்றுள்ளது. ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் பாகிஸ்தானை... மேலும் பார்க்க

Asian Games: `இரட்டை வெண்கலம்' சர்வேதேச அரங்கில் சாதித்து அசத்திய தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார். கலப்பு இரட்டையர் பிரிவில் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு வெண்கலப் ... மேலும் பார்க்க

Asian Games 2026 : வித்யா ராம்ராஜ் டு ஷமீனா ரியாஸ்! பதக்கம் வென்று ஜொலித்த தமிழ்நாட்டின் தங்கமகள்கள்

ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரங்களில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களின் பதக்கங்களும... மேலும் பார்க்க

`400+ எனும் ப்ரஷரை போக்க நானும் ரோஹித்தும் ஒரு முடிவு செஞ்சோம்!' - மெகா சேஸிங் ரகசியம் பகிரும் கில்

நேற்றைய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ODI போட்டியில் இந்தியா ஒரு" Historical" நிகழ்வை நிகழ்த்தியது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் 'சுப்மன் கில்' அடித்த இரட்டைசதம். போட்டியின் பிறகு சுப்மன் க... மேலும் பார்க்க

கில் : ‘வந்தான்’ ‘அடிச்சான்’ `ரெக்கார்டு’ - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், சுப்மன் கில் இரட்டைச் சதம் விளாசி புதிய சாதனை படைத்ததுடன், 406 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கையும் இந்தியா அசால்ட்டாக சேஸ் செய்திருக்கிறது. கில்லின் வரல... மேலும் பார்க்க

Asian games: ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்கள்; ஹாக்கியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம் - Ind Round up

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச்சுற்று நெருங்கிவரும் நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற்ற போட்டிகளில் வில்வித்தையில் (Compound Archery) மூன்று தங்கம் மற்றும் துப்பாக்கிச் சுடுதலில் (Shooting)... மேலும் பார்க்க