செய்திகள் :

சென்னை: பிரபல ரௌடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்; காட்டுப்பகுதியில் என்ன நடந்தது?

post image

சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் முகமது சதாம் (29). ஏ பிளஸ் ரௌடியான இவர் மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கஞ்சா விற்பனையிலும் இவர் ஈடுபட்டு வந்தார். மேலும் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றங்களில் சரிவர ஆஜராகமல் இருந்து வந்த முகமது சதாமைப் பிடிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனால் போலீஸார் முகமது சதாமைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மணிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட கரசங்கால் காட்டுப்பகுதியில் முகமது சதாம் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் டீம் இன்று அதிகாலை அங்குச் சென்று முகமது சதாமைப் பிடிக்க சுற்றி வளைத்தது.

அப்போது மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் காவலர் ஒருவரை ரௌடி முகமது சதாம் தாக்கினார் .

பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, கஞ்சா

அதனால் சுதாரித்துக் கொண்ட போலீஸ் டீம், முகமது சதாமைச் சரண் அடையும்படி எச்சரித்து. ஆனால் அவரோ தப்பி ஓட முயற்சி செய்தார். இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீஸார், முகமது சதாமின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து அவர் சுருண்டு கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்ட போலீஸார், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் ரௌடி முகமது சதாமிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 3 பட்டாக் கத்திகள், 20 கிலோ கஞ்சா உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மணிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸாரிடமும் காயமடைந்தவரிடமும் விசாரணை நடத்தினார்.

தாம்பரம் பகுதியில் அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் ரௌடிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலைகள்... திருட்டுகள்... பாலியல் புகார்கள் - தொடரும் குற்றங்கள்... திணறும் குளித்தலை காவல்துறை

கரூர் மாவட்டம், குளித்தலை துணை கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்டு 7 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில்தான் கடந்த நான்கு மாதங்களாகக் கொலை, திருட்டு, பால... மேலும் பார்க்க

ஸ்மித் மிச்சாருக்குக் கத்திக்குத்து, விபரீதத்திற்குக் காரணமான விமானி யார்? - இதுவரை கிடைத்த தகவல்கள்

‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) துபாய் நேரப்படி, காலையில் துபாயிலிருந்து கிளம்பியுள்ளது.இந்த விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ்வை நோக்கிப் பறந்திருக்கிறது. இந்த விமானத்தில் 17... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: விசிக நிர்வாகி கொடூரக் கொலை; விசாரணை வளையத்துக்குள் 4 பேர்; பழிக்குப் பழியாக நடந்ததா?

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாகலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (52). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த சிவா நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 4 ப... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கல்குவாரியில் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை; குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!

பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன், வெற்றிவேல் (வயது: 27). துபாயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நண்பர்களுடன் சேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்'... தலைவிரித்தாடும் `கொலை' கலாசாரம்!

குற்றவாளிகளுக்குத் துணை நிற்கும் சட்டப் பிரிவுகள்புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் பரப்பளவு தலா சுமார் 3,700 சதுர கிலோமீட்டர்கள். அதேசமயம் காரைக்கால், மாஹே, ஏனாம் ... மேலும் பார்க்க

கவின்: `ஒரு பெண்ணை விரும்பினாங்கிறதுக்காக எங்க பிள்ளைய இப்படிக் கொல்லணுமா?' - பெற்றோர் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர், நெல்லையைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததால் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்... மேலும் பார்க்க