செய்திகள் :

Anbil Avan: "வேற எதுவும் கேட்கத் தோணலையா? நல்ல கேள்வி இருந்தா கேளுங்க..!" - அசோக் செல்வன் பதில்

post image

அசோக் செல்வன் நடித்திருக்கும் 'அன்பில் அவன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.

`அன்பில் அவன்' படத்தில்...
`அன்பில் அவன்' படத்தில்...

இந்தப் படம் குறித்து அசோக் செல்வனின் மனைவியும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் கூறியது பற்றி அசோக் செல்வன், "இந்தப் படம் உருவான காலத்தில் இருந்தே அவங்களுக்கு இந்தக் கதை தெரியும்.

இதற்காக நாங்க எவ்வளவோ உழைச்சிருக்கோம்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். படப்பிடிப்புத் தளத்திற்கும் வந்திருக்காங்க. படம் அவங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்தது.

அவங்களும் கலைத்துறையில இருக்குற ஒரு கலைஞர் என்பதால், இந்தப் படத்தை எப்படிப் பார்க்கணுமோ அப்படிச் சரியாகப் பார்த்தாங்க." என்றவரிடம் செய்தியாளர், படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு காட்சி குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் தந்த அசோக் செல்வன், "நாங்க இரண்டு வருஷம் கடினமாக உழைத்துத் தான் ஒரு படத்தை எடுத்திருக்கோம். ஆனா, அந்த முத்தக் காட்சியைப் பத்தியே ஏன் மூணு பேர் கேட்குறீங்க? எனக்கு உண்மையிலேயே புரியல.

அதைத் தவிர வேற எதுவுமே உங்களுக்குக் கேட்கத் தோணலையா? படம் குறித்து ஏதேனும் நல்ல கேள்விகள் இருந்தா கேளுங்க, பேசலாம்." எனப் பதிலளித்தார்.

`அன்பில் அவன்' படத்தில்...
`அன்பில் அவன்' படத்தில்...

அடுத்து ஆக்‌ஷன் படங்கள் செய்வது பற்றிய திட்டம் குறித்து அசோக் செல்வன், "'ப்ளூ ஸ்டார்' படத்திலயும் கதைக்கு என்ன தேவையோ, அதைத்தான் செய்திருந்தோம். எல்லாமே கதைதான் முடிவு செய்யும்.

அடுத்து ஒரு காதல் கதையில நடிக்க நேர்ந்தால், அதில் ஆக்‌ஷனே இல்லை என்றாலும் நடிக்க நான் தயார். 'ஆக்‌‌ஷன் ஹீரோவாக' மாறணும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை.

நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குக் கொடுக்கணும், அவ்வளவுதான். ஆக்‌ஷன் களத்தை நான் இதுவரை பெருசா முயற்சித்துப் பார்த்ததில்லை, அதனால் இதில் முயற்சி செய்து பார்க்கலாம்னு தோணுச்சு, பண்ணியிருக்கேன்." எனப் பதில் தந்தார்.

Pocket Novel: "உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் தனித்துவமானது" - விஜய் சேதுபதி குறித்து மாளவிகா

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இவர் ... மேலும் பார்க்க

Sigma: "அவர் கண்டிப்பாகப் பெருமைப்படுவார்!" - 'சிக்மா' குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க

Sigma: "சின்ன பையன் சஞ்சய் இப்போ இயக்குநர் ஆகிட்டார்" - ஜேசன் சஞ்சயை வாழ்த்திய சூர்யா & ஜோதிகா

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இ... மேலும் பார்க்க

Sigma: "பிரமாண்ட கடலில், அறிமுக இயக்குநராக எனது பயணத்தைத் தொடங்குகிறேன்!" - நெகிழும் ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. சந்தீப் கிஷன், ராஜு சுந்தரம், அன்புதாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் ... மேலும் பார்க்க

பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!

இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால் ஏரியாவில் அத்தனை வயதினரும் பயப்படுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் ச... மேலும் பார்க்க

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: அழகான கதைதான், ஆனால் தத்துவார்த்த போதனைகள் படத்துக்கு உதவுகின்றனவா?

தீபாவளி இரவில் ஆள் இல்லாத, ரயில் பெட்டியில், எட்டாயிரம் ஆண்டுகளாகத் தன் காதலைத் தேடும் நிவின் பாலியும், தன் குடும்பத்தைப் பிரிந்து எட்டு ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் சூரியும்... மேலும் பார்க்க