செய்திகள் :

Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்...!" - ஜேசன் சஞ்சய்

post image

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sigma Movie Stills
Sigma Movie Stills

ராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இன்று இப்படத்தின் முதல் காட்சியை கமலா திரையரங்கில், தன் தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷாவோடு இணைந்து ஜேசன் சஞ்சய் பார்த்தார்.

படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார் ஜேசன் சஞ்சய். அங்கு, படத்திற்கு தாத்தா சொன்ன பரிந்துரைகள் குறித்தும், படம் குறித்து தன்னுடைய அம்மா என்ன சொன்னார் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அவர், "தாத்தாவோட சஜசனை இந்த படம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நான் கேட்கல. ஆனா, அந்த காலத்துல ஒரு வருஷத்துக்கு இரண்டு, மூணு படங்கள் இயக்கி ஜெயிச்சவர் அவர்.

ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்ற மாதிரி, எந்த இடத்துலயும் தேவையில்லாத செலவுகள் வைக்காம, ரொம்பவும் திறமையா படம் எடுக்கக்கூடிய ஒரு இயக்குநர் தான் எஸ். ஏ. சி சார்.

Jason Sanjay
Jason Sanjay

அவரு என்கிட்ட நேரடியாக இதைச் சொல்லாவிட்டாலும், நாம எல்லாரும் அவர்கிட்ட இருந்து கத்துக்க வேண்டிய விஷயம் இது.

அப்புறம் என் குடும்பத்துல அம்மா, தங்கச்சி எல்லாரும் படம் பார்த்தாங்க. அவங்களுக்குப் படம் ரொம்ப பிடிச்சிருந்தது, பயங்கர ஹாப்பியா ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்தாங்க!" எனப் பகிர்ந்திருக்கிறார்.

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்... மேலும் பார்க்க

Sigma: "நடிப்பு மேல முழுமையாக ஆர்வம் இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா..." - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க

Shruti Haasan: "எனக்கு கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை!" - ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தான் திரைத்துறைக்குள் நடிகையாக நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும், ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று எழுதவே தான் ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

Anbil Avan: "வேற எதுவும் கேட்கத் தோணலையா? நல்ல கேள்வி இருந்தா கேளுங்க..!" - அசோக் செல்வன் பதில்

அசோக் செல்வன் நடித்திருக்கும் 'அன்பில் அவன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்துப... மேலும் பார்க்க

Pocket Novel: "உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் தனித்துவமானது" - விஜய் சேதுபதி குறித்து மாளவிகா

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இவர் ... மேலும் பார்க்க

Sigma: "அவர் கண்டிப்பாகப் பெருமைப்படுவார்!" - 'சிக்மா' குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க