செய்திகள் :

Sigma: "நடிப்பு மேல முழுமையாக ஆர்வம் இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா..." - ஜேசன் சஞ்சய்

post image

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Sigma Movie Stills
Sigma Movie Stills

ராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இன்று இப்படத்தின் முதல் காட்சியை கமலா திரையரங்கில், தன் தாய் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஷாஷாவோடு இணைந்து ஜேசன் சஞ்சய் பார்த்தார்.

படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டார் ஜேசன் சஞ்சய்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் நடிப்பு மீதிருக்கும் ஆர்வம் குறித்து, "முதல்ல ஹீரோ பத்தி பேசுறேன். சந்தீப் கிஷன் ப்ரோ. அவரால இங்க வர முடியல. இந்தப் படத்துக்காக நிறைய நடிகர்களை மீட் பண்ணோம்.

அது ஒரு பெரிய ப்ராசஸா இருந்துச்சு. அந்த சமயத்துலதான் சந்தீப் கிஷன் ப்ரோவை சந்திச்சேன். நான் 'மாநகரம்', 'மைக்கேல்' படங்கள்ல அவரோட நடிப்புக்கு ஒரு பெரிய ஃபேன். தமிழ், தெலுங்குனு கதையை மட்டும் பார்த்து தேர்வு செய்து நடிக்கிற ஒரு நடிகர்தான் சந்தீப் கிஷன் ப்ரோ.

Jason Sanjay
Jason Sanjay

இந்தக் கதைக்கு அவருடைய கேரக்டர் பொருத்தமா இருக்கும்னு நினைச்சேன்; அப்படிதான் இந்த ப்ராஜெக்ட்டுகுள்ள வந்தாரு. அண்ட் ரொம்ப நல்லாவும் பண்ணியிருக்காரு. உங்களுக்கும் பிடிச்சிருக்கும்னு நம்புறேன்.

படத்தை ப்ரொமோட் பண்றதுக்கு நாங்க டீம் எல்லாம் சேர்ந்து ஒரு ப்ரோமோ பாடல் பண்ணினோம். நடிப்பு மேல முழுமையாக ஆர்வம் இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா, இனிதான் அதைப் பத்தி யோசிக்கணும்.

கண்டிப்பா நான் டைரக்ஷன் மட்டும்தான் பண்ணுவேன்னு கிடையாது. நடிப்புக்கு வாய்ப்பு கிடைச்சதுன்னா கண்டிப்பா பண்ணிடலாம்." எனப் பேசியிருக்கிறார்.

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்... மேலும் பார்க்க

Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்...!" - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க

Shruti Haasan: "எனக்கு கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை!" - ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தான் திரைத்துறைக்குள் நடிகையாக நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும், ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று எழுதவே தான் ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

Anbil Avan: "வேற எதுவும் கேட்கத் தோணலையா? நல்ல கேள்வி இருந்தா கேளுங்க..!" - அசோக் செல்வன் பதில்

அசோக் செல்வன் நடித்திருக்கும் 'அன்பில் அவன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ப்ரீத்தி முகுந்தன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் பற்றி செய்தியாளர்களைச் சந்தித்துப... மேலும் பார்க்க

Pocket Novel: "உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் தனித்துவமானது" - விஜய் சேதுபதி குறித்து மாளவிகா

'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இவர் ... மேலும் பார்க்க

Sigma: "அவர் கண்டிப்பாகப் பெருமைப்படுவார்!" - 'சிக்மா' குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க