செய்திகள் :

INDvPAK: அபிஷேக் ஷர்மா அதிரடி; திலக் வர்மாவின் ஃபினிஷிங் - பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா!

post image

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது இந்திய அணி. தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அபிஷேக் ஷர்மா அதிரடி... திலக் வர்மாவின் அசத்தல் ஃபினிஷிங்

இந்தியாவின் தொடக்கத்தை அபிஷேக் ஷர்மா அதிரடியாக அமைத்துக் கொடுத்தார். அவர் 28 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அணிக்கு வேகமான தொடக்கத்தைத் தந்தார்.

பின்னர் முக்கியமான கட்டத்தில் திலக் வர்மா மற்றும் ஷிவம் துபே இணை இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியது. குறிப்பாக, கடைசி ஓவர்களில் இந்தக்கூட்டணி ரன் குவிப்பை அதிகரித்தது. திலக் வர்மா 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும், ஷிவம் துபே 15 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இந்தியாவின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டி 211/6 என்ற நிலையை எட்டியது.

ஹசன் நவாஸின் 96 ரன்கள் போராட்டம்... கைக்கொடுக்காத பாகிஸ்தான்

212 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்குத் தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தன. சாஹிப்சாதா ஃபர்ஹான் 10 ரன்களிலும், உஸ்மான் கான் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

எனினும், ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 96 ரன்கள் விளாசி பாகிஸ்தானின் வெற்றிக்கான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தினார். அவர் 5 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடித்து அதிரடி காட்டினார். அவருடன் சயிம் அய்யூப் 29 ரன்கள் எடுத்தார்.

இந்தியாவின் தொடர்ச்சியான விக்கெட் வேட்டை

ஒருபுறம் ஹசன் நவாஸ் ரன்களைக் குவித்தாலும், மறுபுறம் இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் படேல் (2/29), வாஷிங்டன் சுந்தர் (2/29), ஷிவம் துபே (2/33) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தானின் சேஸிங்கில் ஹசன் நவாஸின் ஆட்டம், போட்டியை கடைசி கட்டம் வரை உயிர்ப்புடன் வைத்திருந்தது. ஆனால், அவரைத் தவிர மற்ற பேட்டர்களிடமிருந்து அதே வேகத்தில் ரன்கள் வரவில்லை. இந்தியாவின் தொடர்ச்சியான விக்கெட் வீழ்த்தல் பாகிஸ்தானின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியது. இறுதி கட்டத்தில் இலக்கை எட்ட முடியாமல் பாகிஸ்தான் 192/6 ரன்களுடன் நின்றது. இதன் மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

2023-க்குப் பிறகு மீண்டும் தங்கம்!

இந்திய ஆண்கள் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் இரண்டாவது டி20 கிரிக்கெட் தங்கம் இதுவாகும். கடந்த 2023 ஹங்ஷோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், உயர்ந்த தரவரிசை (seeding) அடிப்படையில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. அதுவே இந்திய ஆண்கள் அணியின் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் அறிமுகமாகவும் அமைந்தது.

இம்முறை், இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி முழுமையாக விளையாடப்பட்டு, 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து இந்தியா தனது தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துள்ளது.

"பி.டி.உஷா சாதனையை முறியடித்தும் முழு மகிழ்ச்சி வரவில்லை" - வித்யா ராம்ராஜ் சொல்லும் காரணம் என்ன?

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தினார். மேலும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட... மேலும் பார்க்க

Asian Games: `குறி வைச்சா..!' - 17 வயதில் கும்கும் மோஹோத் `தங்க' வெற்றி; ஒலிம்பிக் வரை பேசும் கதை!

சில வெற்றிகள் வெறும் பதக்கங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை ஒரு தலைமுறைக்கான நம்பிக்கையாக மாறுகின்றன. சில அம்புகள் இலக்கை மட்டும் துளைப்பதில்லை; வரலாற்றின் பக்கங்களையும் துளைத்து எழுதுகின்றன. அப்படியொர... மேலும் பார்க்க

Asian Games: குத்துச் சண்டையில் ஆதிக்கம், ஹாக்கியில் வரலாற்றுத் தங்கம் - இந்தியாவின் பதக்க வேட்டை!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 14-வது நாளில் குத்துச்சண்டை, மல்யுத்தம், ஆர்ச்சரி மற்றும் ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா முக்கிய வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. குத்துச்சண்டையில் மூன்று தங்கப் பதக்கங்கள் க... மேலும் பார்க்க

Asian Games: 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கம்… வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!

44 ஆண்டுகளாகக் காத்திருந்த அந்தத் தங்கம்… இப்போது இந்தியாவின் கைகளில்! 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி தங்கப் பதக்க... மேலும் பார்க்க

Asian Games: பிறந்தநாளில் தங்கம் வென்ற தங்க மகள்; வெள்ளியிலிருந்து வாழ்நாள் சாதனை- லவ்லினாவின் பயணம்

5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் சீன வீராங்கனை பாவோ ஸீயியை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றார், லவ்லினா. மேரி கோமுக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியப் பெண் கு... மேலும் பார்க்க

CR7: கைமாறிய ரொனால்டோவின் ‘7’ம் எண் ஜெர்சி… இப்போது ரஃபேல் லியோவிடம்! - இதுதான் காரணமா?!

போர்ச்சுகல் அணியில் நடந்த மாற்றம்கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் போர்ச்சுகல் அணி டென்மார்க்கை எதிர்கொண்ட நிலையில், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது அவரது பிரபலமான ‘7’ம் எண் ஜெர்சி. ரொனால்டோ அணியின் பயிற்சி... மேலும் பார்க்க