செய்திகள் :

"ஆபாசம், வன்மம், வக்கிரம்..." - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

post image

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார்.

அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் இப்போது அந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Sathyabama Vijay
Sathyabama - Vijay

முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ''தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவக்கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதை தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்கு தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்கு தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கூறியிருக்கிறார்.

வடவள்ளி – மருதமலை சாலை... இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகராட்சிக்கு கீழ் வரும் வடவள்ளியில் இருந்து மருதமலை முருகன் கோவில் செல்லும் சாலை, பணிகள் முடிவடையாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அதில் பயணிப்போர் பெரும் துயரத்திற்... மேலும் பார்க்க

"பெண் வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?" – ஸ்டாலினுக்கு கனிமொழி சந்தோஷ் கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க வேட்பாளர் சத்யபாமா குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்திற்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரானவை என கவுண்ட... மேலும் பார்க்க

தேர்தலை எதிர்கொள்ளும் பஞ்சாப், உ.பி. மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் - காங்கிரஸ் முயற்சி பலனளிக்குமா?

பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. இத்தேர்தலில் தங்களுக்கு 150 தொகுதிகள்... மேலும் பார்க்க

Flydubai இணை விமானி ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ - நெதன்யாகு சொன்னது என்ன?

ஃபிளைதுபாய் விமானத்தின் விபரீத சம்பவத்திற்குக் காரணமானவர் ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்ஹமாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சிரியாவில் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும், அப்போதுதான் அவர் தீவிரவாதக... மேலும் பார்க்க

'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த வலைதளத்தில் த... மேலும் பார்க்க

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர... மேலும் பார்க்க