செய்திகள் :

Flydubai இணை விமானி ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ - நெதன்யாகு சொன்னது என்ன?

post image

ஃபிளைதுபாய் விமானத்தின் விபரீத சம்பவத்திற்குக் காரணமானவர் ஓமனைச் சேர்ந்த ஹமாம் அல்ஹமாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் சிரியாவில் பெரும்பாலான நேரத்தைக் கழித்ததாகவும், அப்போதுதான் அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ஓமனில் உள்ள விமான நிறுவனம் ஒன்றான ‘ஓமன் ஏர்’ அவரை விமானியாக அதாவது விமானம் இயக்குவதிலிருந்து தடை செய்திருக்கிறது.

இதையெல்லாம் தாண்டிதான், அவர் ஃபிளைதுபாய் விமானத்தில் விமானியாகப் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹமாம் அல்ஹமாமி
ஹமாம் அல்ஹமாமி

குறிப்பிட்ட விமானச் சம்பவத்திற்குப் பிறகு, ஹமாம் அல்ஹமாமி ‘என்னைக் கொன்றுவிடுங்கள்... என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்று கூறியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டிருந்தார். இது தீவிரவாதப் பேட்டர்ன் என்றும் தெரிவித்திருந்தார்.

நேற்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்திலும் ஹமாம் அல்ஹமாமி ‘இஸ்லாமியத் தீவிரவாதி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகு கூறுவதாவது...

“காலப்போக்கில், நிகழ்ந்த உண்மை நிலவரம் தெளிவாகி வருகிறது. யானிவும் அவரது வீரம் நிறைந்த தோழர்களும் இணைந்து ‘செப்டம்பர் 11’ பாணியிலான ஒரு மிகப்பெரிய பேரழிவைத் தடுத்துள்ளனர்.

அந்தத் தாக்குதல்தாரி இஸ்லாமியத் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டுத் தீவிரவாதியாக மாறியவன். அவன் விமானத்தையும் அதில் பயணித்த அனைத்துப் பயணிகளையும் அழிக்கும் நோக்குடனேயே இச்செயலைச் செய்துள்ளான்.

அவனை யாராவது இயக்கி அனுப்பினார்களா என்பது குறித்து நாம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

அவனை அனுப்பியவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் அதற்கு மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்.” என்றிருக்கிறார்.

"ஆபாசம், வன்மம், வக்கிரம்..." - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் ... மேலும் பார்க்க

"பெண் வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?" – ஸ்டாலினுக்கு கனிமொழி சந்தோஷ் கண்டனம்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க வேட்பாளர் சத்யபாமா குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்திற்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரானவை என கவுண்ட... மேலும் பார்க்க

தேர்தலை எதிர்கொள்ளும் பஞ்சாப், உ.பி. மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் - காங்கிரஸ் முயற்சி பலனளிக்குமா?

பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. இத்தேர்தலில் தங்களுக்கு 150 தொகுதிகள்... மேலும் பார்க்க

'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த வலைதளத்தில் த... மேலும் பார்க்க

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர... மேலும் பார்க்க

’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’ – அமைச்சர் நிர்மல்குமார் ஆரூடம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்ச... மேலும் பார்க்க