செய்திகள் :

`ஹெராயின், மெத்தம்பெட்டமைன் கடத்திய கடத்தல் மன்னன் இந்தியாவுக்கு நாடு கடத்தல்' - அமித் ஷா பெருமிதம்

post image

துருக்கியில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் நவ்பிரீத் சிங்கை கைது செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"துருக்கியில் தலைமறைவாக இருந்த பயங்கர போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவ்பிரீத் சிங்கை வெற்றிகரமாக நாடு கடத்தி அழைத்து வந்ததன் மூலம், நரேந்திர மோடி அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.

அமித்ஷா பதிவு
அமித்ஷா பதிவு

'நவாப் விர்க்' என்ற போலி அடையாளத்தில் துருக்கியக் குடியுரிமையைப் பெற்றிருந்த அவன், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஹெராயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் போன்ற கொடிய போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்தான்.

நமது புலனாய்வு அமைப்புகள் அவனைப் பின்தொடர்ந்து, அவனது போலி முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கிழித்தெறிந்து, அவனது உண்மையான அடையாளத்தை தெரியப்படுத்தி, அவனை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளைச் சட்டப்பூர்வமாக உறுதிசெய்தன.

இன்று அவன் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த மகத்தான வெற்றிக்குக் காரணமான அனைத்துப் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

டிசம்பர் 2029-க்குள் நாட்டில் உள்ள அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களையும் வேரோடு அழிப்பதில் மோடி அரசு முழு வீச்சில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது". என பதிவிட்டுள்ளார்.

'2 நிமிடக் கதை' இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

நேற்று காந்தி ஜெயந்தி. இதை முன்னிட்டு, இந்தியாவில் நடக்கும் பாதிப்புகள் மற்றும் பிரச்னைகளை முன்னெடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலைதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த வலைதளத்தில் த... மேலும் பார்க்க

’ஸ்டாலினின் அருவருப்பான பேச்சை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்’ –அமைச்சர் சம்பத்குமார்

தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர... மேலும் பார்க்க

’அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக தேர்தலை சந்திப்பார்கள்’ – அமைச்சர் நிர்மல்குமார் ஆரூடம்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தாராபுரத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், உண்மையான முகத்தை பிரச்ச... மேலும் பார்க்க

EC: 'SIR-ல் Form 6 குறித்து ஏன் மேற்கு வங்க தேர்தலின் போது சொல்லவில்லை?' - சிதம்பரம் கேள்வி

‘எங்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் 10 மாதங்களில் 14 முடிவுகள் எடுக்கப்பட்டது’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோ... மேலும் பார்க்க

'ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை' Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்?

கடந்த 30-ம் தேதி, துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்த ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். சக விமானி விமா... மேலும் பார்க்க

ஸ்டாலின் : “உருவகேலி கூடாது என்ற தலைவரே இப்படி பேசி இருப்பது.!” - கொதிக்கும் தமிழக அமைச்சர்கள்

வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, நேற்று தாராபுரத்தில் பிரசாரம் செய்தார் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளரான சத்யபாமாவை உருவகேலி செய்வதுபோலப் பேசியிர... மேலும் பார்க்க