செய்திகள் :

நல்ல வேலைவாய்ப்பு சீக்கிரம் அமைய 11 எளிய பரிகாரங்கள் - விளக்குகிறார் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்!

post image

படிப்புக்கேற்ற - திருப்தியான சம்பளத்துடன் நல்ல வேலை அமைவது அபூர்வம். சிலருக்கு எளிதில் நல்ல வேலை அமைந்துவிடும்; சிலருக்கு வேலையே அமையாது. இதுபற்றி ஜோதிடம் சொல்வது என்ன, எந்த ராசிக்கு வேலை யோகம் உண்டு, பரிகாரங்கள் என்ன... விவரிக்கிறார் ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்.

பொதுவாக மேஷம், ரிஷபம், துலாம் ராசியினர் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் இவர்களின் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கும். சரி, மற்ற ராசியினர் எப்படி? விரிவாகத் தெரிந்துகொள்வோமா...

சிலருக்குப் பண வசதி நிறைய இருக்கும். பிள்ளைகளை பல லட்சங்கள் செலவு செய்து படிக்கவைப்பார்கள். ஆனால், பிள்ளைகளோ அவர்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாக படிக்க முடியாமல் திணறுவார்கள். ஒருவேளை, படிப்பை முடித்தாலும் உரிய வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும்!

ஆனால் வேறு சிலர்... கடன் வாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அல்லது வேறு எவரேனும் உதவியோடு படிப்பைத் தொடர்வார்கள் அந்தப் பிள்ளைகள். படிப்பில் அவர்கள் ‘நம்பர் ஒன்’ ஆக இருப்பார்கள். படித்து முடித்ததும், மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு சம்பளம் பெற்று திடீர் அதிர்ஷ்டசாலி ஆகிவிடுவார்கள்.

ஒருவரின் வாழ்வில் இப்படியெல்லாம் அற்புதம் நிகழுமா என்பதை அறிய வேண்டும் என்றால், அவரது ஜனன ஜாதகத்தைப் புரட்ட வேண்டும். ஜாதகத்தில் கல்விக்குரிய கிரகமான புதன், நினைவாற்றலுக்கு உரிய சந்திரன், 5-ம் வீட்டுக்கு உரிய கிரகம், அந்த வீட்டில் நிற்கும் கிரகம் ஆகியவற்றின் நிலையை ஆராய்ந்து பலன் அறிய வேண்டும். அதேபோல், முயற்சி ஸ்தானத்தையும் கவனிக்கவேண்டும்.

அதேபோல் படிப்புக்கேற்ற நல்ல வேலை உடனடியாகக் கிடைக்க வேண்டும் எனில், ஜாதகத்தில் உத்தியோக ஸ்தானமாகிய 10-ம் இடம் நல்ல நிலையில் இருக்கவேண்டும். ஜோதிடம் சொல்லும் பொதுவான தகவல்கள் இவை. மற்றபடி ஒவ்வொரு ஜாதகத்தையும் துல்லியமாகக் கணித்து பலன் அறியவேண்டும். ஜோதிட நூல்கள் ராசிகள் சார்ந்து சில தகவல்களை விளக்குகின்றன.

வேலை வாய்ப்பு ஜோதிட விளக்கங்கள்!

12 ராசிக்காரர்களில் எந்தெந்த ராசிக்கு நல்ல படிப்பு நல்ல உத்தியோகம் அமைய வாய்ப்பு இருக்கிறது?

பொதுவாக புதனுடைய ராசிகளான மிதுனம், கன்னி; குருவுடைய ராசிகளான தனுசு, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் நிறைய படிப்பார்கள். இவர்கள், தங்கள் வாழ்க்கை முழுக்க கல்விக்காக ஏதாவது ஒருவகையில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்.

அதேபோல் மேஷம், ரிஷபம், துலாம் ராசியினர் ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்வார்கள். இரண்டும் இவர்களின் முன்னேற்றத்துக்குப் பக்கபலமாக இருக்கும்.

இந்த 7 ராசிக்காரர்கள்தான் படிப்பிலும் வேலையிலும் ஜொலிக்க முடியும் என்றில்லை. எல்லா ராசியினருக்குமே கல்வி நன்றாக வரும். அந்த கல்வியின் நிலை என்ன என்பதை ஜாதகத்தை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும்.

ஒருவர் ஐ.டி. படிப்புகள் படிக்க வேண்டும் என்றால், அவரது ஜாதகத்தில் புதன், சனி, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். இந்த 4 கிரகங்களும் வலுவாக இருந்து, அவை உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்புகொண்டிருந்தால், படிக்கும் போதே நல்ல வேலையும் கிடைத்துவிடும். அதாவது, கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலைக்குத் தேர்வாகிவிடுவார்கள். அவர்களின் சம்பளமும் நல்ல நிலையில் இருக்கும்.

சரி, நல்லதொரு வேலை அமைய தெய்வத்தின் துணையும் அவசியம் அல்லவா? அதன்படி சில எளிய பரிகாரங்களைச் செய்து வழிபாடு செய்தால், விரைவில் நிச்சயம் பலன் கிடைக்கும்.

பரிக்கல் நரசிம்மர்
பரிக்கல் நரசிம்மர்

எளிய பரிகாரங்கள்...

1. தினமும் வீட்டில் காலையில் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்படி விளக்கேற்றும்போது நரசிம்மரை மனதில் நினைத்துத் துதித்தபடியே விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். நரசிம்மர் உடனடியாக வந்து காக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வணங்கி ஒரு நாளைத் தொடங்கும்போது, நம்மைச் சுற்றியிருக்கும் தீய சக்திகள் எல்லாம் விலகிச் சென்றுவிடும். நாள்தோறும் இப்படி வழிபட இயலாது என்பவர்கள், குறைந்தபட்சம் சனிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

2. சனிபகவானே நம் உழைப்பை எடுத்துக்கொள்பவர். அதனால் அவருக்கு எள் எண்ணெய் தீபம் ஊற்றி வணங்கி வருவது சிறப்பு. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி என சனியின் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல... வேலை வாய்ப்பு தேடுவோர், பணியிடத்தில் பிரச்னை உள்ள அனைவருக்குமே இந்த வழிபாடு நல்ல பலன் கொடுக்கும்.

3. சுதர்ஸனர் அஷ்டகம் சொல்வதோ அல்லது சுதர்ஸன சதகம் சொல்வதோ மிக மிக விசேஷம். இவை இரண்டுமே நமக்குக் கவசம் போன்றவை. குறிப்பாகப் பணியிடத்தில் காரணமே இல்லாமல் சிலர் உங்களைக் குறைசொல்வது, பிரச்னைகளை உங்கள் பக்கம் திருப்புவது என்று இருப்பார்கள். இப்படிக் காரணங்களற்ற வெறுப்பிலிருந்து விடுபட, இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்வதும், கேட்பதும் நல்லது.

4. கந்த சஷ்டிக் கவசம். அதன் பெயரிலேயே கவசம் என்று உள்ளது. இந்தக் கவசத்தை நாம் பாராயணம் செய்வது நம்மை எப்போதும் காக்கும்.

5. `மந்திரங்கள் எல்லாம் சொல்லத் தெரியாது. செய்ய எளிமையான பரிகாரங்களைச் சொல்லுங்கள்’ என்று சிலர் கேட்பார்கள். அப்படிப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிக்குள் சனி ஹோரையில் (இது குளிகன் நேரமும்கூட) ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு. வீட்டிலேயே வழிபடலாம். அல்லது ஆலயம் சென்றும் வழிபடலாம். இதன் மூலம் வெகு சீக்கிரம் வேலை அமையும்.

6. ஆலயத்துக்கு நல்லெண்ணெய் தானம் கொடுப்பது அல்லது தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

7. ஏழை மாணவ-மாணவிகளுக்குப் புத்தகம், பேனா வாங்கித் தருவது போன்ற சின்னச்சின்ன உதவிகள் செய்யலாம். தங்கள் பிள்ளையின் மேற்படிப்பு சிறப்பாக அமைய ஆசைப்படும் பண வசதியுள்ள பெற்றோர், ஏழை மாணவர்களைத் தத்தெடுத்து படிக்கவைக்கலாம்.

8. வீட்டில் விளக்கேற்றிவைத்து அனுதினமும் உங்கள் குல தெய்வத்தை வணங்கி வாருங்கள். இயன்றால் மாதம் ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்கு நேரில் சென்று வழிபட்டு வாருங்கள். விரைவில் நல்ல மாற்றம் உண்டாகும்.

9. கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவஹீந்திர புரம் எனும் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே ஞானானந்த மயமாக கோயில் கொண்டிருக்கும் பரிமுகக்கடவுளாம் அருள்மிகு ஹயக்ரீவரை வணங்கி வழிபடுவதும் நல்ல பலன் தரும். கற்ற கல்வி காலம் முழுக்கக் கைகொடுக்கும்.

10. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகருக்கு மோதகமும், சுண்டலும் நைவேத்தியம் செய்து, அருகம்புல் சமர்ப்பித்து வழிபடுவதால், விநாயகரின் திருவருளோடு, புதன் மற்றும் கேது கிரகங்களின் நல்லருளையும் பெறலாம்; அதன் மூலம் உத்தியோக பாவத்தில் உள்ள தடங்கல்கள் நீங்கும்.

11. தொடர்ந்து 11 திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; விரைவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு உண்டாகும். சனிக்கிழமை அன்று வரும் மகா பிரதோஷ தினத்தன்று, அருகிலுள்ள சிவாலயத்துக்கு அபிஷேக திரவியங்கள் வாங்கிக்கொடுக்கலாம்.

நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க

உங்கள் ஜாதகத்தில் சனியுடன் வேறு கிரகம் சேர்ந்திருக்கிறதா? பரிகாரம் அவசியமா? - தெரிந்துகொள்ளுங்கள்!

ஜோதிடத்தில் அதிகம் கவனம் பெறும் கிரகம் சனி. ஜாதகப்படியும் கோசாரப்படியும் அவருடைய நிலைகளை உன்னிப்பாக கவனிப்போம். ஆனால், அவர் பயத்தைத் தருபவர் அல்ல; வினைகளைத் தீர்க்க உதவும் நீதிமான். அதேநேரம், ஜாதகத்தி... மேலும் பார்க்க

உங்கள் குழந்தைக்கு எந்த நாளில் பெயர் சூட்டுவது நல்லது? - முக்கிய தினங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்!

நம் வாழ்வும் கனவும் நம் பிள்ளைகள்தானே. அவர்களுக்கான முக்கிய தினங்கள் விசேஷமாக அமைவது சிறப்பல்லவா? அவ்வகையில் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கான... பெயர் சூட்டுவது, முடிக்காணிக்கை, காது குத்... மேலும் பார்க்க

கடகத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: இந்த கிரகச் சேர்க்கையால் எந்தெந்த ராசிகளுக்கு ராஜ யோகம்?

மேஷம்: உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்குச் செவ்வாய் வந்திருப்பது, ஓரளவு நன்மையான பலன்களையே தரும். நான்கில் இருக்கும் குருவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளதால், எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். எனினும் இந்தக... மேலும் பார்க்க

வார ராசிபலன் | 28.9.26 முதல் 4.10.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் September 28 th to October 4th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career... மேலும் பார்க்க

பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் மேலும் பார்க்க