செய்திகள் :

‘ஒரு சாமானியனின் அறச்சீற்றம்!’

post image

தமிழகத்தின் மிகப் பிரபலமான அடையாளம். எண்ணத்தில் என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே வெளிப்படையாகப் பேசும் பேச்சுக்குச் சொந்தக்காரர்.

‘நான் நினைக்கும் தமிழகமோ, இந்தியாவோ இப்படித்தான் இருக்க வேண்டும்’

என்று, தன்னுடைய சொந்த அறிவோடும் படிப்போடும் இணைத்து எல்லா விஷயங்களையும் அசைபோட்டு எடைபோடுகிறவர். உலக விஷயங்கள் முதல் உள்ளூர் விஷயங்கள் வரை அனைத்திலும் இவருடைய பார்வை சமூகத்துக்கானது; தனித்துவமானது. எதையும் சமூகத்தின் நலனுக்கானதாக இணைத்துப் பார்க்கும் வல்லமை படைத்த இவர், இன்றைய இந்தியாவின் சட்ட திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி, போதைக் கலாசாரம், நிதிப் பங்கீடு, குதிரைப் பேர அரசியல், ஆட்சி அதிகாரத்துக்காக எதையும் செய்யும் போக்கு, அபாயகரமான சதி என அனைத்திலும் இருக்கும் ஆபத்தையும் முரண்களையும் அப்பட்டமாக உள்வாங்கி மனதில் தேக்கிவைத்திருக்கிறார்.

‘அதையெல்லாம் எழுத்தாக்கினால், இளைய சமுதாயத்துடன் இணைத்த மொத்தச் சமூகமும் படிக்குமே. தெளிவுறுமே. ஒன்றிரண்டிலாவது முரண் களையப்படட்டுமே. அதுவும் ஒரு சமூகப் பணிதானே’ என்று சொல்ல, தன் சிந்தனை ஓட்டத்தை எழுத்தாக்க ஒப்புக்கொண்டார்.
தன் எழுத்துகள் வாயிலாக, ‘ஒரு சாமானியனின் அறச்சீற்றம்’

என்ற தலைப்பில், சமூகத்தின் ஒவ்வோர் அசைவையும் அங்குலம் அங்குலமாக அலசவிருக்கிறார்.
அவர் யார்... அவருடைய சிந்தனைகள் என்னென்ன?
அடுத்த இதழ் வரை காத்திருங்கள்...

‘ஒரு சாமானியனின் அறச்சீற்றம்’

சமூகத்தின் அப்பட்டமான நிகழ்வுகளையும் யதார்த்தங்களையும் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தும்.

ஒரு சாமானியனின் அறச்சீற்றம்!

ஒரு சாமானியனின் அறச்சீற்றம்!ஒரு சாமானியனின் அறச்சீற்றம்! - விரைவில்...``நான் நினைக்கும் தமிழகமோ, இந்தியாவோ இப்படித்தான் இருக்க வேண்டும்’’ மேலும் பார்க்க

பசுமை சந்தை...

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர... மேலும் பார்க்க