செய்திகள் :

Doctor Vikatan: அதிகரிக்கும் இளவயது ஸ்ட்ரோக்... கொலஸ்ட்ரால் குறைந்தாலும் ஆபத்துதான்!

post image

Doctor Vikatan: எனக்குத் தெரிந்த குடும்பங்களில் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் பாதித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இளவயதிலேயே அவர்களுக்கு ஸ்ட்ரோக் பாதித்தது பயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ட்ரோக் பாதித்ததாக பிரபலங்கள் பகிரும் செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். சமீபகாலமாக இளவயதினரிடம் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்... தவிர்க்கவும் தப்பிக்கவும் வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்

நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. பேச்சு, கை, கால் அசைவு, பார்வை, கேட்பது, உணர்வது என எல்லா செயல்களும் மூளையின் மூலமே நடக்கின்றன. மூளையின் ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடை ஏற்படும்போது, அதன் தாக்கத்திற்கேற்ப நம் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். உதாரணத்துக்கு, பேச்சில் பிரச்னை வரலாம், பார்வையில் பாதிப்பு வரலாம். கை, கால்களில் லேசான மரத்துப்போன உணர்வு ஏற்படலாம். பலவீனமாக உணரலாம்.

அதுவே ரத்தக்குழாய்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது உடலின் ஒரு பக்கம் முழுவதுமோ, இரு பக்கங்களுமோ செயலற்றுப்போகலாம். மூளைக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி மிகச் சாதாரணமானது முதல் மிக மோசமானது வரை பாதிப்பு எப்படியும் இருக்கலாம். 

சமீபகாலமாக இள வயதினரிடம் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவைதான். வயதாகும்போது பக்கவாத பாதிப்பு அதிகரிக்கிறது. 

கெட்ட கொலஸ்ட்ரால் மூளைக்கு எப்படி ஆபத்தானதோ, அதேபோல கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருப்பதும் மூளைக்கு ஆபத்தானதுதான்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் இந்த ரிஸ்க் அதிகரிக்கிறது. புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன், உடல் இயக்கமற்ற வாழ்க்கைமுறை, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருப்பது போன்ற எல்லாமே பக்கவாத ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகள். எனவே இவை தவிர்த்த ஆரோக்கிய வாழ்வியல் முறை பின்பற்றப்பட வேண்டும்.

கெட்ட கொலஸ்ட்ரால் மூளைக்கு எப்படி ஆபத்தானதோ, அதேபோல கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருப்பதும் மூளைக்கு ஆபத்தானதுதான். அது குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஜப்பானியர்களிடம் மூளையில் ஏற்படும் இந்த பாதிப்பு மிக அதிகம். காரணம், அவர்களது அதீத ஆல்கஹால் பழக்கமும், மிகக்குறைவான கொலஸ்ட்ரால் அளவும்தான். இந்த விஷயங்களாலும் ஒருவருக்கு பக்கவாத பாதிப்பு வரலாம். எனவே. கொலஸ்ட்ரால் சரியான அளவில் தக்கவைத்துக்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். இதையெல்லாம் இளவயதிலிருந்தே கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 
 

Doctor Vikatan: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு... வராமல் பாதுகாக்க தடுப்பூசி இருக்கிறதா?

Doctor Vikatan:டெங்கு பாதிப்பு வராமலிருக்க தடுப்பூசி இருக்கிறதா... இதுவரை அது பற்றி யாரும் பேசிய மாதிரி இல்லை. வராமல் தடுக்க உதவும் மருந்துகள் உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வீட்டை விட்டு வெளியே போனாலே மாஸ்க் அணியும் நண்பன்... பாதுகாப்பா... பாதிப்பா?

Doctor Vikatan:என் நண்பனுக்கு 30வயதாகிறது. அவன் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் மாஸ்க் அணியாமல் இருக்க மாட்டான். கொரோனா காலத்தில் ஆரம்பித்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. இப்படி எப்போதும் மாஸ்க் அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண் இமைகளின் மேல் வரும் மருவை அகற்றுவது பாதுகாப்பானதா, எப்படி அகற்றுவது?

Doctor Vikatan: என் உறவினருக்கு 45 வயதாகிறது. அவருக்கு கண் இமையின் மேல் மரு உள்ளது.இப்படி கண்களின் மேலும் கண்களைச் சுற்றியும் வரும் மருக்களை அகற்றுவது பாதுகாப்பானதா... எந்த முறையில் அகற்றுவது சிறந்தது... மேலும் பார்க்க

Doctor Vikatan: டிரெண்டாகும் Tai Chi வாக்கிங்... அப்படி என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: சமீபகாலமாக தாய்ச்சி வாக்கிங் என்ற பெயரில் ஒன்று டிரெண்ட் ஆகிறதே... அது என்ன... எல்லோரும் செய்யலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ் ஃபிட்னெஸ் பயிற்ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடற்பயிற்சியின்போது வெளியேறாத வியர்வை...கொழுப்பு குறையாது என அர்த்தமா?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக ஜிம் சென்று உடற்பயிற்சிகள் செய்கிறேன். மற்ற எல்லோருக்கும் உடைகள் நனையும் அளவுக்கு வியர்க்கிறது. ஆனால், எனக்கு மட்டும் வியர்ப்பதே இல்லை. உடலில் இருந்து வியர்வை வெ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டெங்கு: குணமான பிறகும் தொடரும் உடல் சோர்வு... சரியாகுமா, இப்படியேதான் தொடருமா?!

Doctor Vikatan: எனக்கு கடந்த மாதம் டெங்கு பாதித்தது. ஒரு மாதம் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தேன். ஆனாலும் எனக்கு உடல்சோர்வு குறையவே இல்லை. இது இப்படியேதான் தொடருமா... டெங்குவின் தீவிரம் குறைந்துவிட்... மேலும் பார்க்க