செய்திகள் :

'ஓமன் நாட்டில் விமானம் இயக்க தடை' Flydubai சம்பவத்திற்கு காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி யார்?

post image

கடந்த 30-ம் தேதி, துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்த ஃபிளைதுபாய் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சார் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.

சக விமானி விமானத்தைத் தகர்க்க முயன்றபோது ஸ்மித் மச்சார் அதைத் தடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தாக்குதல்தான் இது.

இதுவரை யார் அந்தச் சக விமானி என்பது தெரியவில்லை. அவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமே இஸ்ரேல் தரப்பில் இருந்து வெளிவந்த ஒரே தகவல். தற்போது அந்தச் சக விமானி யார் என்பது தெரியவந்துள்ளது.

ஃபிளைதுபாய் விமானம்
ஃபிளைதுபாய் விமானம்

யார் அவர்?

குறிப்பிட்ட ஃபிளைதுபாய் விமானத்தின் முதன்மை விமானி ஸ்மித் மச்சார். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான உதவி விமானி ஹமாம் அல்ஹமாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் தகவலின்படி, ஹமாம் அல்ஹமாமியின் தந்தை ஓமன் நாட்டைச் சேர்ந்தவர். தாய் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்த ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, அல்ஹமாமி தனது பெரும்பாலான காலத்தைச் சிரியாவில் கழித்துள்ளார். அங்குதான், அவர் தீவிரவாதக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தடை

2024-ம் ஆண்டு ‘ஓமன் ஏர்’ என்னும் விமான நிறுவனத்தில் உதவி விமானிப் பயிற்சியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரிடம் தீவிரவாதம் சம்பந்தமான பொருள்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு விமானம் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, அந்த நிறுவனத்திலேயே நிர்வாகம் சார்ந்த பணிகளை மட்டும் செய்து வந்திருக்கிறார்.

ஓமன் ஏர் நிறுவனத்தின் தடையை மீறியும், ஃபிளைதுபாய் நிறுவனத்தில் இவருக்கு உதவி விமானிப் பணி வழங்கப்பட்டிருக்கிறது.

30-ம் தேதி ஃபிளைதுபாய் விமானத்தை இஸ்ரேலுக்குள் மோதிப் பேரழிவை ஏற்படுத்துவதுதான் அல்ஹமாமியின் பிளானாக இருந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

EC: 'SIR-ல் Form 6 குறித்து ஏன் மேற்கு வங்க தேர்தலின் போது சொல்லவில்லை?' - சிதம்பரம் கேள்வி

‘எங்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் 10 மாதங்களில் 14 முடிவுகள் எடுக்கப்பட்டது’ என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோ... மேலும் பார்க்க

ஸ்டாலின் : “உருவகேலி கூடாது என்ற தலைவரே இப்படி பேசி இருப்பது.!” - கொதிக்கும் தமிழக அமைச்சர்கள்

வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, நேற்று தாராபுரத்தில் பிரசாரம் செய்தார் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளரான சத்யபாமாவை உருவகேலி செய்வதுபோலப் பேசியிர... மேலும் பார்க்க

நெல்லை: வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!

நெல்லை: வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.! மேலும் பார்க்க

தாராபுரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தாராபுரம் இடைத்தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்தாராபுரம் இடைத்தே... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் களம்: தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்! - Photo Album

தாராபுரம் இடைத்தேர்தல் மு க ஸ்டாலின் திமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் மு க ஸ்டாலின் திமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் மு க ஸ்டாலின் திமுக வேட்பாளர் ஆதர... மேலும் பார்க்க

திம்மாவரம்: சிதிலமடைந்த பள்ளிக் கட்டடம்; வகுப்பறைக்குள் தேங்கும் மழைநீர்- குழந்தைகள் கல்வி பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் பேசுகையில், “இந்த பள்ளிக் கட்டடம்... மேலும் பார்க்க