செய்திகள் :

'ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!'- சீமான்

post image

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த நாம் தமிழர் கட்சி, அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடக்கம் முதலே கேள்வி எழுப்பி வந்தது.

தகுதியுள்ள வாக்காளர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படுகிறதா? பெயர் சேர்த்தலும் நீக்குதலும் உரிய சட்ட நடைமுறைகளின்படி நடைபெறுகின்றனவா? தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படுகிறதா? என்று நாம் தமிழர் கட்சி எழுப்பிய ஐயங்கள் அனைத்தும் சரியானவை என்பதை நிறுவும் வகையில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்
Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதினான்கு முறை எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதை எளிதில் கடந்துவிட முடியாது. சில நடவடிக்கைகள் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டதும், வாக்காளர் தரவுகளைக் கையாளும் நடைமுறைகள் குறித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான ஐயத்தை மேலும் அதிகரிக்கிறது.

வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரைச் சேர்ப்பது, யாருடைய பெயரை நீக்குவது என்பதைத் தீர்மானிக்கும் நடைமுறையே நேர்மையானதாக இல்லையென்றால், அதன் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்கள் மட்டும் எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்?

எங்களைப்போன்ற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியபோது தட்டிக்கழித்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இன்றைக்கு துணை தேர்தல் ஆணையர்களே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா?

படிவம் 6 தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிக்காகப் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக, செப்டம்பர் 26 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஆனால், மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அக்டோபர் 5 அன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றம் வழங்காத ஒப்புதலை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறியது ஏன்? உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே 140 கோடி மக்களை ஏமாற்றும் அதிகாரத்தை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கொடுத்தது யார்?

சீமான்
சீமான்

எந்த அடிப்படையில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன? பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அறிவிப்பும், விளக்கமளிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டதா? முறையீடுகள் எவ்வாறு கையாளப்பட்டன? என்பதற்குத் தெளிவான பதில் வேண்டும். எதிர்ப்புகள் பதிவான கோப்புகள் எவை, அவற்றுக்கான பதில்கள், ஒப்புதல் வழங்கப்பட்ட பதிவுகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

கருத்து வேறுபாடுகள் இயல்பானவைதான், ஆனால் முடிவுகள் ஒருமித்த முறையில் எடுக்கப்பட்டவை என்று தேர்தல் ஆணையம் அளிக்கும் விளக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர் எதிர்ப்பு தெரிவித்தார்களில் எனில், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் விதிகளின்படியே அம்முடிவு தோற்றுப்போன முடிவாகும். அதன் அடிப்படையில் நடைபெற்ற தேர்தல்களும் செல்லத்தக்கவை அல்ல!

இது ஒரு கட்சியின் வெற்றி, தோல்வி பற்றிய கேள்வியல்ல; மக்களுக்காக மக்களே வழங்கிய மக்களின் தீர்ப்பை நேர்மையாகப் பிரதிபலிக்க வேண்டிய தேர்தல் முறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வி. வாக்களித்தால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வருங்காலத் தலைமுறையிடம் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் கேள்விகளுக்கு வெறும் அமைதி மட்டுமே பதிலாக இருக்க முடியாது.

எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதற்கான உரிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, பெயர் நீக்கங்கள், தரவுகள் கையாளப்பட்ட விதம், ஆணையத்தின் முடிவெடுக்கும் நடைமுறை ஆகியவற்றை நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு
தேர்தல்

மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் உரிய சட்ட நடைமுறைகளின் வாயிலாக ரத்து செய்வதுடன், சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலுடன், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையும் உறுதிசெய்தப் பின்னர் உச்சநீதிமன்ற கண்காணிப்பில், நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' - அமைச்சர் அருண்ராஜ்

கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையைய... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் 'இந்தி' சர்ச்சை; உடனடியாக மாற்றப்பட்ட கவர்; பின்னணி என்ன?

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். கோவையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களும் அதிகளவில் சிகிச்ச... மேலும் பார்க்க

`பதிவு போட்டேன்ல அதுபோதும் புரியறதுக்கு... அதிருப்தியிலதான் இருக்கேன்!' – நாஞ்சில் சம்பத் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நாஞ்சில் சம்பத் எந்த நேரமும் வெளியேறலாமெனத் தெரிய வருகிறது.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பர... மேலும் பார்க்க

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்குக் கௌரவம்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் தீர்மானம் என்ன சொல்கிறது?

ஃபிளைதுபாய் விமானத்தில் நடக்கவிருந்த விபரீதம் இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரால் தடுக்கப்பட்டது.இதையொட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபை, கேப்டன் ஸ்மித் மச்சார், ஃபிளைதுபாய் 1073 விமானத்த... மேலும் பார்க்க

'இந்துவாக இருந்தும் செவ்வாய்க்கிழமை அசைவமா?' - ராகுல் குறித்து சர்ச்சை; கார்த்தி சிதம்பரம் பதிலடி

வாக்காளர் பெயர்கள் நீக்கம், சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணியும், போராட்ட... மேலும் பார்க்க