செய்திகள் :

'இந்துவாக இருந்தும் செவ்வாய்க்கிழமை அசைவமா?' - ராகுல் குறித்து சர்ச்சை; கார்த்தி சிதம்பரம் பதிலடி

post image

வாக்காளர் பெயர்கள் நீக்கம், சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணியும், போராட்டமும் நடைபெற்றது.

இது 'இந்தியா' கூட்டணி சார்பாக நடந்தது. இந்தப் பேரணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் தலைமையேற்று நடத்தினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அசைவம் சாப்பிடும் ராகுல் காந்தி...

இந்தப் பேரணி வீடியோ ஒன்றில் ராகுல் காந்தி அசைவ ரோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து சிலர், “போராட்டம் நடைபெறும் இடத்தில் ராகுல் காந்தி ரோல் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பொட்டலத்தை ஜூம் செய்து பார்த்தபோது, அதில் சிவப்பு நிறக் குறியீடு இருக்கிறது.

பொதுவாக அசைவ உணவைக் குறிக்கவே இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும்.

அப்படியானால், ஒரு இந்துவான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை அன்று அசைவ உணவு சாப்பிடுகிறார் என்று இதற்கு அர்த்தமா?” என்று சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் பதிலடி

இதற்குப் பதில் தரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “சாதாரண பா.ஜ.க ஆதரவாளர்களின் தீவிரமான சைவ உணவுத் திணிப்பு இது!

உங்கள் தகவலுக்குச் சொல்கிறேன்... இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் (80% மேல்) கறி, கோழி, மீன் போன்ற அசைவ உணவை உண்பவர்கள்தாம்” என்று பதிவிட்டுள்ளார்.

SIR: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க அனுமதி மறுப்பா? நடைமுறையை மீறியதா 'இந்தியா' கூட்டணி?

நேற்று (அக்டோபர் 6) டெல்லியில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" - காங்கிரஸ் சரமாரி கேள்வி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுதப்போரை விட கொடூரமான ஒரு போரை சொந்த நாட்டு மக்கள் மீதே நடத்தியிருக்கிறது ஜனநாயக விரோத பா.ஜ.க அரசு.... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி தொடர் போராட்டம்; டெல்லியில் ராகுல் காந்தி கைது!

டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. நாடாளுமன்றத்தி... மேலும் பார்க்க

நிறைவடைந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; பதிவான வாக்குகள் எவ்வளவு?

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ... மேலும் பார்க்க

`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!' - டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து ஒவ்வொன்றாக காணலாம்!`ஒற்றை க... மேலும் பார்க்க

`எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? ஞானேஷ் குமார் தப்ப முடியாது..!'- ராகுல் காந்தி காட்டம்

டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. நாடாளுமன்றத்தி... மேலும் பார்க்க