செய்திகள் :

Doctor Vikatan: ஜலதோஷத்துக்குப் பயன்படுததிய மருந்து... சருமத்தில் அலர்ஜி... நிரந்தர தீர்வு உண்டா?

post image

Doctor Vikatan: என் ஆண் நண்பருக்கு 30 வயதாகிறது.  ஜலதோஷத்திற்கு   மெடிக்கல் ஷாப்பில்  மாத்திரை வாங்கிப் பயன்படுத்திய போது உதடு, ஆணுறுப்பு, கை விரல் இடுக்கு, உள்வாய் மேல் அண்ணம் போன்ற பகுதிகளில் வீக்கமும் அரிப்பும் ஏற்பட்டது. 

நீர்கோத்து வெடித்து பெரும் அவஸ்தையை உண்டாக்கியுள்ளது. அவரது சிறு வயதில் இரண்டு, மூன்று முறையும் சமீப வருடங்களில் இரண்டு, மூன்று முறையும் இவ்வாறு நடந்துள்ளது. எதனால் இப்படி நடக்கிறது என்று  குழம்பியுள்ளார்.

பிறகு மருத்துவரை அணுகியபோது தான் அவருக்கு Sulfa Drug allergy உள்ளது தெரிய வந்தது. தற்போது அவரது உதடுகள் வெள்ளை நிறத்தில் உள்ளன. இது என்ன பிரச்னை... எப்படி சரிசெய்வது?

பதில் சொல்கிறார், திருச்சி, தென்னூர் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் நிறைமதி

சருமநல மருத்துவர் நிறைமதி
சருமநல மருத்துவர் நிறைமதி

நோயாளிக்கு மருந்து ஒவ்வாமை (Drug Allergy) ஏற்பட்ட வரலாறு உள்ளதை நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அலர்ஜி வந்த இடத்தில் நிறமிகள் (Pigment) இல்லாமல் போயுள்ளன. இதனால் 'போஸ்ட் இன்ஃப்ளமேட்டரி ஹைபோபிக்மென்டேஷன்' (Post-inflammatory hypopigmentation) என்ற பிரச்னை உருவாகியுள்ளது.

அலர்ஜி வந்த இடத்தில் சருமத்தின் நிறமிகள் பலவீனமடைந்து வெண் புள்ளிகள் (White spots) தோன்றியிருக்கும். சிலருக்கு இந்த ஹைபோபிக்மென்டேஷன் தானாகவே சரியாகிவிடும். மாறாமல் தொடரும் புள்ளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். நிறமி செல்களை (Pigment cells) சீராக்கும் கிரீம்கள் மற்றும் ஆயின்மென்ட் (Ointments) கொடுக்கப்படும்.

இதில் முன்னேற்றம் இல்லை என்றால், நிறமி செல்களைத் தூண்டுவதற்காக 'எக்சைமர் லேசர்' (Excimer laser) சிகிச்சை முறை பயன்படுத்தப்படும். சருமத்தில் மாற்றங்களை எதிர்பார்ப்பதற்கு 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும்.

நிறமி செல்களை (Pigment cells) சீராக்கும் கிரீம்கள் மற்றும் ஆயின்மென்ட் (Ointments) கொடுக்கப்படும்.

ஒவ்வாமையை ஏற்படுத்திய மருந்தை அடையாளம் காண வேண்டும். உங்கள் நண்பருக்கு அது   'சல்ஃபா மருந்து'  என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மீண்டும் பாதிப்பு வராமல் இருக்க சல்ஃபா மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

சருமம் சென்சிட்டிவ் தன்மை (Sensitive) கொண்டதாக இருப்பதால், அதை ஈரப்பதத்துடன் (Moisturized) வைத்துக்கொள்ள வேண்டும். நிறமிகளை மீட்கும் தைலங்களைத் தொடர்ந்து பயன்படுத்திவிட்டு, மருத்துவரின் ஆலோசனையைப் பின்தொடர (Follow-up) வேண்டும்.

டாக்டர் நிறைமதி:

திருச்சி, தென்னூர் காவேரி மருத்துவமனையில் சருமநல மருத்துவராகப் பணிபுரிகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: கோதுமைப்புல் சாறு குடித்தால் கேன்சர் வராது என்பது உண்மையா?

Doctor Vikatan:தினமும் கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் கேன்சர் வராது என்று சொல்கிறார்களே, அது உண்மையா? எவ்வளவு குடிக்க வேண்டும்..?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்கும... மேலும் பார்க்க

Doctor Vikatan: கஞ்சியா, கார்ன்ஃப்ளேக்ஸா, இட்லி, பொங்கலா? - காலை உணவுக்கு ஏற்றது எது?

Doctor Vikatan: காலை உணவுக்கு திரவ உணவுகள் சரியானவையா... காலை உணவு ஹெவியாக இருக்க வேண்டும் என்கிறார்களே, அப்போது அதை எப்படித் திட்டமிட வேண்டும்?கஞ்சியா, கார்ன்ஃப்ளேக்ஸா, இட்லி, பொங்கலா- காலை உணவுக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'மாத்திரை போட்டேனா, இல்லையா' - மறந்துவிட்டால் அப்படியே விடுவதா, மறுபடி போடலாமா?

Doctor Vikatan:ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்து வருகிறேன். சில நாள்கள் மாத்திரை சாப்பிட்டேனா, இல்லையா என்பது மறந்துவிடுகிறது. இந்நிலையில், அந்த வேள... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்... எல் நினோ தாக்கம் காரணமா?

இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழை வெயில் மாறுபாடு, வெப்பநிலை மாற்றம், ஈரப்பதத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இப... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிகரிக்கும் இளவயது ஸ்ட்ரோக்... கொலஸ்ட்ரால் குறைந்தாலும் ஆபத்துதான்!

Doctor Vikatan: எனக்குத் தெரிந்த குடும்பங்களில் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் பாதித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இளவயதிலேயே அவர்களுக்கு ஸ்ட்ரோக் பாதித்தது பயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ட்ரோக் பாதித்ததாக ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு... வராமல் பாதுகாக்க தடுப்பூசி இருக்கிறதா?

Doctor Vikatan:டெங்கு பாதிப்பு வராமலிருக்க தடுப்பூசி இருக்கிறதா... இதுவரை அது பற்றி யாரும் பேசிய மாதிரி இல்லை. வராமல் தடுக்க உதவும் மருந்துகள் உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சி... மேலும் பார்க்க