செய்திகள் :

`எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? ஞானேஷ் குமார் தப்ப முடியாது..!'- ராகுல் காந்தி காட்டம்

post image

டெல்லியில் இன்று (அக்.6) எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி பேரணி
இந்தியா கூட்டணி பேரணி

பாதுகாப்புப் பணிக்காக டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த மாதிரியான போராட்டங்களில் முன்வரிசையில் நின்று போராடும் திமுக, இந்தப் பேரணியில் கலந்துகொள்ளவில்லை.

இந்தப் பேரணியின் போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி, "நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டனர். முழு நாடும் இதை நம்புகிறது.

நாட்டின் இளைஞர்களும் இதை நம்புகிறார்கள். என்னைத் தடுத்த காவல்துறையினரும்கூட இதைத்தான் சொல்கிறார்கள். உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

"பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் 'வாக்குத் திருட்டு' மூலம் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

அவர்களுக்கு ஞானேஷ் குமார் உதவியிருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அல்லது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என யாருமே தப்ப முடியாது. நமது நாட்டிற்குச் செய்யப்பட்டது தேசத்துரோகம். இதில் இருந்து யாரும் தப்பித்து ஓட முடியாது.

கோடிக்கணக்கான இந்திய மக்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். எங்களை சந்திக்க தேர்தல் ஆணையம் அஞ்சுவது ஏன்? காவல்துறை ஏன் எங்களைத் தடுத்து மிரட்டுகிறது?" என்று பேசியிருக்கிறார்.

இந்திய கூட்டணி சார்பில் பேரணி

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!' - டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்

டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து ஒவ்வொன்றாக காணலாம்!`ஒற்றை க... மேலும் பார்க்க

``தவெகவுக்கு ஆதரவு என்பது வாசனின் முடிவு; நான் அரசை விமர்சிப்பது வேறு!" - சொல்கிறார் தமிழருவி மணியன்

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தன்னுடைய காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைத்தவர் தமிழருவி மணியன்.தொடர்ந்து, `` `இன்னைக்கு இருக்கிற அரசியல் சூழல் உங்களுக்குச் சரிய... மேலும் பார்க்க

' எந்தப் போராட்டத்தையும் தூண்டிவிட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.!' - என்ன சொல்கிறார் மனோ தங்கராஜ்?

நேற்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே செவிலியர்கள் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டது பேசுபொருளாகியிருந்தது. இந்தப் போராட்டத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டதும் பேசுபொர... மேலும் பார்க்க

இடைத்தேர்தல்: ``எந்த விறுவிறுப்பும் இல்லாமல் நடக்கிறது..!" - தமிழிசை சௌந்தரராஜன்

பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``நடைபெற்று வரும் இடைத்தேர்தல் எந்தப் பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லாமல் நடைபெறுகிறது. பொதுத்தே... மேலும் பார்க்க

India Bloc March: ராகுல் தலைமையில் கூடிய எதிர்க்கட்சியினர்; பரபரப்பான டெல்லி... பங்கேற்காத திமுக!

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காள... மேலும் பார்க்க

விஸ்வரூபம் எடுக்கும் தற்கொலை வழக்கு; ​தலைமை தேர்தல் ஆணையர் மீது விசாரணை... கேரள அரசு தீவிரம்!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தேசிய அளவில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அவர்மீது கேரள மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு புதிய விசாரணையைத் தொடங்கிய... மேலும் பார்க்க