செய்திகள் :

'இது எளிதான முடிவு அல்ல, மன அமைதியுடன் நான் விடைபெறுகிறேன்.!'- ஹர்மன்ப்ரீத் கவுர் எமோஷனல்

post image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களின் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். இது எளிதான முடிவு அல்ல.

இதில் என் வாழ்நாள் முழுவதும் என்னோடு நிலைத்திருக்கும் பல ஆண்டுகளின் நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் தருணங்கள் அடங்கியுள்ளன.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய மகளிர் அணிக்காக என் ரத்தம், வியர்வை, நேரம் என அனைத்தையும் கொடுத்தேன். ஒரு கேப்டனாக, நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன்.

நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் இந்திய அணியை சிறப்பாக மாற்றுவதற்காகத் தான். மிகவும் மோசமான தருணங்கள், மனமுறிவுகள், விமர்சனங்கள், சந்தேகங்கள் போன்ற நாட்களை நான் பார்த்திருக்கிறேன்.

அதே சமயம் மிகச்சிறந்த தருணங்களையும் அனுபவித்திருக்கிறேன். உணர்வுகள் நிறைந்த இதயத்துடன், அதே வேளையில் மன அமைதியுடன் இன்று நான் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெறுகிறேன்.

என் அணி ஒரு நல்ல நிலையில் இருக்கிறது என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். திறமை, நம்பிக்கை மற்றும் ஒரு சிறந்த எதிர்காலம் கொண்ட ஒரு அணி இந்திய அணி.

அதில் ஒரு அங்கமாக இருக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என் கடமையை நான் செய்து முடித்துவிட்டதாக உணர்கிறேன். இந்த அணிக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன்.

பெருமையுடன் இந்த பொறுப்பை சுமந்தேன், மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

என்னுடய கேப்டன் பதவி இன்றுடன் முடிவடையலாம், ஆனால் இந்திய கிரிக்கெட் மீதான என் அன்பு என்றும் முடிவடையாது.

உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னுடன் உறுதுணையாக நின்ற ஒவ்வொரு சக வீரர், பயிற்சியாளர், உதவி ஊழியர்கள், நிர்வாகம், பிசிசிஐ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொரு ரசிகருக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் விளையாட நான் தயாராக இருக்கிறேன். கேப்டன் பதவி முடிகிறது. பயணம் தொடர்கிறது" எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"நான் வைபவிடம் பெரும்பாலும் கிரிக்கெட் குறித்து பேசமாட்டேன்; ஏன்னா.?"- ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து ... மேலும் பார்க்க

`கதை இன்னும் முடியல'- 15,000 ODI ரன்கள்… சதம் அடித்து மாஸ் காட்டிய கோலி; வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 15,000 ODI ரன்கள் என்ற பிரமாண்ட மைல்கல்லை கடந்ததுடன், சதம் விளாசி ஆட்டத்தையும் இந்தியாவின் வசமாக்கியிருக்கிறார் கோலி. ஒரு பக்கம் அவரது வரலாற்றுச் சா... மேலும் பார்க்க

JPN vs IND: கடைசி பந்து வரை ஆட்டம் காட்டிய ஜப்பான்… 2 ரன்களில் `த்ரில்' வெற்றி பெற்ற இந்தியா!

“ஆட்டம் சின்னதா இருக்கலாம்... ஆனா ட்விஸ்ட் பெரியதாக இருக்கணும்!” என்பதற்கு சரியான உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி.வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி... மேலும் பார்க்க

இறுதி கட்டத்தில் வெளியேறிய பதானி; தோனியின் முடிவு! - CSK புதிய கோச் ஆக ஜாகீர் கான் தேர்வானது எப்படி?

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், தனது நீண்டகால பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கிற்குப் பிறகு புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜா... மேலும் பார்க்க

CSK: "வெற்றிகரமான ஒரு அணியில் அங்கம் வகிப்பது பெருமை!" - தலைமைப் பயிற்சியாளரானது பற்றி ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க

CSK: 'Left Arm Taking Over!' - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். Zaheer Khan கடந்த 18 வருடங்களாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சி... மேலும் பார்க்க