செய்திகள் :

Doctor Vikatan: கோதுமைப்புல் சாறு குடித்தால் கேன்சர் வராது என்பது உண்மையா?

post image

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் கேன்சர் வராது என்று சொல்கிறார்களே, அது உண்மையா? எவ்வளவு குடிக்க வேண்டும்..?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்


கோதுமைப்புல்லில் ஏராளமான நுண் வேதிப்பொருள்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்  (Antioxidants)   எனப்படும் ஆக்சிஜனேற்றத் தடுப்புகளும் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்துகளும் நிறைந்துள்ளன.

இது உடலில் கழிவுகள் தேங்குவதைத் தடுக்க உதவுகிறது. அதன் மூலம்  உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

கோதுமைப்புல்லில் உள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்புத் தன்மையால் (Antioxidant properties), இது புற்றுநோய்க்கு எதிரான ஒரு பொருளாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஓர் உணவுப்பொருளாக இதைப் பார்க்கலாம். அதற்காக இதை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் புற்றுநோயே வராது என்று கூறிவிட முடியாது. மாறாக, நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகளில் கோதுமைப் புல்லும் ஒன்றாக இடம்பெறும்படி பார்த்துக்கொள்ளலாம்.

கோதுமைப்புல்லில் உள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்புத் தன்மையால் (Antioxidant properties), இது புற்றுநோய்க்கு எதிரான ஒரு பொருளாகக் கருதப்படுகிறது.

கோதுமைப் புல்லில் பலவிதமான நுண் ஊட்டச்சத்துகள் (Nutrients) உள்ளன. நோய் எதிர்ப்புத் திறனைத் தரும் உணவாகவும், பல்வேறு நோய்களைத் தடுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இதை குறிப்பிட்ட இடைவெளிகளில் எடுத்துக்கொள்ளலாம். கோதுமைப் புல் சாப்பிட்டால் புற்றுநோய் முற்றிலுமாகக் குணமாகிவிடும் என்று சொல்வது தவறான தகவலாகும். வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளாமல், வெறும் கோதுமைப்புல் சாறு மட்டும் எடுத்துக்கொள்வது சரியானதும் அல்ல.  

கோதுமைப்புல் சாறு நல்லது என்றாலும் அதையும் அளவுக்கு அதிகமாக பருக வேண்டியதில்லை.  அருகம்புல் சாறு அருந்துவது போல, குறைவான அளவு மட்டும் எடுத்துக்கொண்டாலே இதன் முழுப் பலன்களையும் பெற முடியும்.

டாக்டர் விக்ரம் குமார்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: கஞ்சியா, கார்ன்ஃப்ளேக்ஸா, இட்லி, பொங்கலா? - காலை உணவுக்கு ஏற்றது எது?

Doctor Vikatan: காலை உணவுக்கு திரவ உணவுகள் சரியானவையா... காலை உணவு ஹெவியாக இருக்க வேண்டும் என்கிறார்களே, அப்போது அதை எப்படித் திட்டமிட வேண்டும்?கஞ்சியா, கார்ன்ஃப்ளேக்ஸா, இட்லி, பொங்கலா- காலை உணவுக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: 'மாத்திரை போட்டேனா, இல்லையா' - மறந்துவிட்டால் அப்படியே விடுவதா, மறுபடி போடலாமா?

Doctor Vikatan:ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுத்து வருகிறேன். சில நாள்கள் மாத்திரை சாப்பிட்டேனா, இல்லையா என்பது மறந்துவிடுகிறது. இந்நிலையில், அந்த வேள... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்புகள்... எல் நினோ தாக்கம் காரணமா?

இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழை வெயில் மாறுபாடு, வெப்பநிலை மாற்றம், ஈரப்பதத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இப... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிகரிக்கும் இளவயது ஸ்ட்ரோக்... கொலஸ்ட்ரால் குறைந்தாலும் ஆபத்துதான்!

Doctor Vikatan: எனக்குத் தெரிந்த குடும்பங்களில் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் பாதித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இளவயதிலேயே அவர்களுக்கு ஸ்ட்ரோக் பாதித்தது பயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ட்ரோக் பாதித்ததாக ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு... வராமல் பாதுகாக்க தடுப்பூசி இருக்கிறதா?

Doctor Vikatan:டெங்கு பாதிப்பு வராமலிருக்க தடுப்பூசி இருக்கிறதா... இதுவரை அது பற்றி யாரும் பேசிய மாதிரி இல்லை. வராமல் தடுக்க உதவும் மருந்துகள் உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வீட்டை விட்டு வெளியே போனாலே மாஸ்க் அணியும் நண்பன்... பாதுகாப்பா... பாதிப்பா?

Doctor Vikatan:என் நண்பனுக்கு 30வயதாகிறது. அவன் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் மாஸ்க் அணியாமல் இருக்க மாட்டான். கொரோனா காலத்தில் ஆரம்பித்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. இப்படி எப்போதும் மாஸ்க் அ... மேலும் பார்க்க