செய்திகள் :

Baththa: "அந்த சீன்ல உண்மையாவே அழுதுட்டேன்!" - 'பத்தா' சபரியாக நடித்த சாய் ப்ரித்விராஜ்

post image

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சபரி கதாபாத்திரத்தில் நடித்த சாய் பிரித்விராஜ் என்கிற சிறுவன், பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இன்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.

பத்தா | Baththa
பத்தா | Baththa

இந்த நிகழ்வில் சாய் பிரித்விராஜ், "நிஜமா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, இது என்னோட முதல் சினிமா பயணம். இதுவரைக்கும் ஒரு படத்துல கூட நான் நடிச்சது இல்லை, இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் மூவி. ஆரம்பத்துல எனக்குள்ள ஒரு சின்ன பயமும், அதே நேரத்துல மிகப்பெரிய சந்தோஷமும் இருந்துச்சு.

அந்த நேரத்துல எனக்குள்ள என்னென்னவோ எமோஷன்ஸ் போயிட்டு இருந்துச்சு, அதை வார்த்தையால எப்படி வெளிப்படுத்துறதுன்னே எனக்குத் தெரியல.

ஆனா, செட்ல எல்லாருகிட்டயும் ரொம்ப ஜாலியாதான் பழகினேன். டைரக்டர் பாலாஜி தரணிதரன் சாருக்கும், விஜய் சேதுபதி சாருக்கும் ரொம்ப நன்றி.

செட்ல நான் அங்கேயும் இங்கேயுமே ஓடிட்டே இருப்பேன். ஆனா எல்லாரும் என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.

இந்த 60 நாள் 'பத்தா' படத்துல வேலை பார்த்த அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பா, என்னை கேமராவுல ரொம்ப அழகா காட்டியிருந்தாங்க.

Baththa - Sai Prithviraj
Baththa - Sai Prithviraj

படத்துல நானும் விஜய் சேதுபதி சாரும் பேசுறப்போ, என்னை அவ்வளவு அழகா ஃப்ரேம் பண்ணியிருந்தாங்க. அந்த சீன்ல நடிக்கும்போதே நான் நிஜமாவே அழுதுட்டேன்.

விஜய் சேதுபதி சாருடன் நடிக்கும்போது பயமாத்தான் இருந்துச்சு. ஆனா, அதை நான் வெளியில காட்டிக்கவே இல்லை. பயத்தை முகத்துல வர விடாம அப்படியே கட்டுப்படுத்திவிட்டேன்" எனப் பேசி முடித்தார்.

Jailer 2: "இன்னைக்கு என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்!" - 'ஜெயிலர் 2' டிரெய்லர் ஹைலைட்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவானது 'ஜெயிலர... மேலும் பார்க்க

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​... மேலும் பார்க்க

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்ந... மேலும் பார்க்க

``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

"விடுதலை படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்"- சூரி

நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சூரி, "எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன... மேலும் பார்க்க

மண்டாடி : 'பிரம்மிப்பா இருக்கு.!'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி

மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்... மேலும் பார்க்க