செய்திகள் :

மண்டாடி : 'பிரம்மிப்பா இருக்கு.!'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி

post image

மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'.

மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் படத்தைப் பார்த்த சூர்யா, சூரியை பாராட்டி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

சூர்யா
சூர்யா

சூர்யா அனுப்பி இருக்கும் கடிதத்தில், " சூரி, அட்டகாசம்! இந்த கேரக்டருக்காக எவ்வளவு மன உறுதியும் உடல் உறுதியும் தேவைப்பட்டிருக்கும்னு நினைச்சாலே பிரம்மிப்பா இருக்கு! உங்க வெற்றியைப் பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

'மண்டாடி' வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்தியிருக்கிறார்.

இதனைத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சூரி, "சூர்யா அண்ணே, 'மண்டாடி' பார்த்துட்டு நீங்க அனுப்பிய பூங்கொத்தும், அன்பான வாழ்த்தும் ரொம்ப சந்தோஷமா இருக்கு!

என் உழைப்பைப் புரிஞ்சு நீங்க சொன்ன வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கு.

மண்டாடி
மண்டாடி

இன்னும் நல்லா உழைக்கணும்னு தோணுது. என் வெற்றியை உங்க வெற்றியா நினைச்சு சந்தோஷப்படுற அந்த அன்புக்கு ரொம்ப நன்றி அண்ணே" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

Rishikanth: "எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள்..." - நெகிழும் ரிஷிகாந்த்

நீண்ட கால முயற்சிக்குப் பிறகு நடிகர் ரிஷிகாந்துக்குத் தற்போது வெற்றி நாற்காலி கிடைத்திருக்கிறது. அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'மொத ராத்திரி' மற்றும் 'டோரதி' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல... மேலும் பார்க்க

மூடர்கூடம் : மடமையின் நுட்பம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 29

`சினி'ஸ்கோப் 29மூடர்கூடம் : மடமையின் நுட்பம்!’எங்க குப்பத்துல நான் எவ்வளவு பெரிய ஆள்னு இவனுகளுக்கு தெரியல. இங்க ஒரு மருடர்னு விழுந்துடக்கூடாதேனு கம்முனு இருக்கேன்’ என்கிறான் கன்னிஸ். அதைக் கேட்டு நம் ... மேலும் பார்க்க

Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?

குரு (சந்தீப் கிஷன்), தன் குடும்பச் சொத்தான பழைய நூலகம் ஒன்றைச் சிரமப்பட்டு நடத்தி வருகிறார். கடன் சுமை ஒரு கோடிக்கும் மேலிருக்க, அதை எப்படியேனும் உடனே அடைக்க வேண்டும் என்ற கட்டாயம். இந்த நிலையில் சூத... மேலும் பார்க்க

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்... மேலும் பார்க்க

Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்...!" - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க