Jr. NTR: "அருவருப்பானது, கேவலமானது, வெட்கக்கேடானது" - ஜூனியர் என்.டி.ஆர் கொந்தளி...
Jr. NTR: "அருவருப்பானது, கேவலமானது, வெட்கக்கேடானது" - ஜூனியர் என்.டி.ஆர் கொந்தளிக்க காரணம் என்ன?
'தேவரா' திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற 'சுட்டமல்லி' பாடலின் போலி ஏஐ (AI Deepfake) வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், அதனைக் கடுமையாகக் கண்டித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் கோபத்துடன் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர், "மிகவும் அருவருப்பானது, கேவலமானது மற்றும் வெட்கக்கேடானது!
பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் வணங்கும் நமது நாட்டில், 'மாத்ரு தேவோ பவ' என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது நமது கலாசாரத்தின் அடையாளம்.
அப்படிப்பட்ட நாட்டில் சில மனிதர்கள் இவ்வளவு கேவலமாகத் தரமிறங்கி, ஒரு பெண்ணை அவமானப்படுத்துவதற்காக ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த அளவுக்குக் கீழ்த்தரமான ஒரு விஷயத்தை உருவாக்க ஏஐ-ஐ பயன்படுத்தியது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு வெட்கக்கேடானது.
இந்தச் 'சுட்டமல்லி' போலி வீடியோவுக்குப் பின்னால் இருக்கும் சமூக விரோதிகளை நான் சும்மா விடமாட்டேன். இதை உருவாக்கியவர்கள் மற்றும் இணையத்தில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பேன்.
Disgusting, Sick and Shameless.
— Jr NTR (@tarak9999) October 3, 2026
In a land that worships women as mothers and goddesses, where "Matrudevo Bhava" is not just a phrase but a part of our culture, some people have fallen so low that they are using AI to disrespect a woman in the most degrading way possible. Using…
தயவுசெய்து இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்காதீர்கள், பகிராதீர்கள், ஊக்குவிக்காதீர்கள். இன்று இது வேறு ஒருவருக்கு நடந்திருக்கிறது.
நாளை இது உங்கள் தாய், சகோதரி, மனைவி அல்லது மகளுக்குக்கூட நடக்கலாம். இது மிகவும் தீவிரமான விஷயம். ஏஐ தொழில்நுட்பத் தவறான பயன்பாட்டிற்கு எதிராக மாநில அரசுகளும், இந்திய அரசும் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் கொண்டுவர வேண்டும்'' என்றார்.




















