செய்திகள் :

The Paradise: "நீங்கள் செய்த ட்ரோல்களையும் அதே அளவு ரசித்தேன்!" - நானியின் பதிவு

post image

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

The Paradise Movie
The Paradise Movie

திரைப்படம் வெளியான நாள் முதல், எதிர்மறையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வருகிறது. படத்திற்குக் கிடைத்து வரும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் நானி ஒரு பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், "உங்கள் அனைவரின் எதிர்வினைகளையும் பதில்களையும் நான் பார்த்தேன். நீங்கள் பொழிந்த அன்பைப் பெற்றுக்கொண்டது போலவே, நீங்கள் செய்த நகைச்சுவையான ட்ரோல்களையும் அதே அளவு ரசித்தேன்.

பார்வையாளர்கள் இப்படத்தைத் தங்கள் சொந்தப் படமாகவே கொண்டாடிய விதம் என் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது.

அதேவேளையில், விமர்சகர்களும் மதிப்பாய்வாளர்களும் சுட்டிக்காட்டிய குறைகளில் இருந்தும் கற்றுக்கொண்டேன்.

Nani - The Paradise
Nani - The Paradise

உங்கள் அனைவருக்கும் ‘நன்றி’ என்பதைத் தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது.

உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருவதற்காகவே, அளப்பரிய உழைப்பையும் வியர்வையையும் சிந்தி 'தி பாரடைஸ்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

அதை உடைமையாக்கிக் கொண்டாடுவதும் விமர்சிப்பதும் முற்றிலும் உங்களுடையதே. இந்தப் படத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆர்வமும், என் மீது நீங்கள் காட்டிய அன்பும் என் மனதை அளப்பரிய நன்றியால் நிரப்பியுள்ளது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

The Paradise: "எண்ணற்ற தூக்கமில்லாத இரவுகள், இடைவிடாத உழைப்பு!" - நெகிழும் நானியின் மனைவி

நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், திரையுலகில் நானியின் 16 ஆண்டுகாலப் போராட்டம் குறித்து அவரின் மனைவி அஞ்சனா எலவர்த்தி சமூக வலைதளப் ப... மேலும் பார்க்க

'The Paradise படத்தில் தண்ணீருக்குள் நடக்கும் சண்டைக்காட்சி இருக்கிறதா?' - நானி சொல்வது என்ன?

'தசரா' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வருகிற 24-ம் தேதி திரைய... மேலும் பார்க்க

Varun Tej: "நீ வந்த பின்தான்... அன்பையே நான் கண்டிருக்கிறேன்!"- குழந்தை பற்றி வருண் - லாவண்யா தம்பதி

நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி தம்பதிக்குக் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குக் கடந்தாண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. Varun Tej - Lavanya Tripathi's Sonத... மேலும் பார்க்க

Allu Arjun: "சேலை அணிந்து நடிக்க வேண்டும் என பயமாக இருந்தது; ஆனால்..." - அல்லு அர்ஜுன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி பேன்-இந்தியா ஹிட் அடித்திருந்தது ‘புஷ்பா 2' திரைப்படம். அப்படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மற்ற சினிமாக்களிலும் அதிகரித்திருக்கிறது. புஷ்பா 2இத்தி... மேலும் பார்க்க

``காதலித்தேன்... தோல்வியடைந்தேன்... மதுகுடித்தேன்..." - பர்சனல் பகிர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா 'Romanchakam' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்க... மேலும் பார்க்க

`நடிக்க வாய்ப்பளிப்பதாக பொய் வாக்குறுதி' - பாலியல் வன்கொடுமை புகாரில் இயக்குநர் பவன் சதினேனி கைது

திருமணம் செய்து கொள்வதாகவும், சினிமாவில் வாய்ப்பு தருவதாகவும் கூறி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பவன் சதினேனியை கோல்கொண்டா காவல்துறையினர் கைது செய்த... மேலும் பார்க்க