செய்திகள் :

Rishikanth: "எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள்..." - நெகிழும் ரிஷிகாந்த்

post image

நீண்ட கால முயற்சிக்குப் பிறகு நடிகர் ரிஷிகாந்துக்குத் தற்போது வெற்றி நாற்காலி கிடைத்திருக்கிறது. அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'மொத ராத்திரி' மற்றும் 'டோரதி' படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

'மொத ராத்திரி' படத்தின் ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு சமூக வலைதளப் பக்கங்களில் இவரைப் பற்றி அதிகமாகப் பேசினர். தற்போது தன்னுடைய நடிப்புக்குக் கொடுத்த பாராட்டுகளுக்கும், தன்னுடைய படங்களுக்குத் தந்த வரவேற்புகளுக்கும் நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார் ரிஷிகாந்த்.

Dorothy
Dorothy

அந்தப் பதிவில் அவர், "என்னுடைய 15 வருட பயணம் அர்த்தமுள்ளதாக இருந்தது என்று என்னை உணர வைத்த ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும், என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும், என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல வருடக் காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடங்கள், "இன்னும் எவ்வளவு காலம்?" "இந்தப் பயணம் என்னை எங்கு அழைத்துச் செல்லும்?" என்று நான் என்னையே கேள்வி கேட்ட தருணங்கள் உண்டு.

ஆனால் இன்று, நீங்கள் என் மீது பொழிந்துகொண்டிருக்கும் அன்பையும், பாசத்தையும், ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி! உங்கள் அனைவரிடமிருந்தும் ஏராளமான மெசேஜ்கள், கமெண்ட்கள், வாழ்த்துகள், எடிட்கள், அழைப்புகள், அன்பான வார்த்தைகள் எனத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியாக இரண்டு படங்களின் வெளியீடுகள் மற்றும் புரமோஷன்கள் காரணமாக, உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, நன்றி சொல்ல என்னால் இதுவரை முடியவில்லை.

ஆனால், அதற்காக நான் உங்கள் அன்பை உணரவில்லை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நான் ஒவ்வொரு தருணமும் உணர்ந்திருக்கிறேன்.

Rishikanth
Rishikanth

எனக்காக நேரம் ஒதுக்கி, என்னுடன் நின்ற ஒவ்வொரு மனிதரையும், நான் மனதார மதிக்கிறேன். இனிமேல், உங்கள் ஒவ்வொருவருக்கும் மெல்ல மெல்ல தனிப்பட்ட முறையில் பதிலளிக்க, நன்றி சொல்லத் தொடங்குகிறேன். அதற்கு சிறிது காலம் ஆகலாம்.

ஆனால், நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் பதிலளிப்பேன். ஏனென்றால், இவ்வளவு அன்பை எனக்குக் கொடுத்த உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் முறையாக பதில் அளிக்க வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.

நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பு என்னை உண்மையிலேயே நெகிழச் செய்கிறது. ஆனால், அந்த அன்பு என் தலைக்குள் ஏறிவிடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

மாறாக, உங்கள் அன்பு என்னை முன்பைவிட அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வலியுறுத்துகிறது. என்மீது அன்பையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நீங்கள் வைக்கத் தொடங்கும்போது, அந்த அன்பை மதிப்பது என்னுடைய பொறுப்பாகிறது.

அந்தப் பொறுப்பை மிகவும் பணிவுடன் சுமக்க விரும்புகிறேன். இனிமேல் நான் பண்ணும் ஒவ்வொரு படத்திலும் இன்னும் கடினமாக உழைப்பேன். இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்வேன்.

மிக முக்கியமாக, நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் நம்பிக்கையை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

Rishikanth
Rishikanth

15 வருடங்களாக அங்கீகாரத்திற்காகப் போராடிய எனக்கு, இன்று நீங்கள் கொடுத்து வரும் இந்த அன்பு மிகவும் சிறப்பானதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்கிறது.

அதிலும் என்னை மிகவும் ஆழமாகத் தொட்ட ஒரு விஷயம், உங்கள் குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. இன்று எனக்கு ஒரு மிகப்பெரிய குடும்பம் கிடைத்துவிட்டது என்ற உணர்வு வருகிறது.

என்னுடைய பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. என் உண்மையான பொறுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது என்று உணர்கிறேன்.

இன்னும் கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். நீங்கள் என்மீது வைத்திருக்கும் இந்த அன்பிற்குத் தகுதியானவனாக மாற தொடர்ந்து முயற்சி செய்வேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மூடர்கூடம் : மடமையின் நுட்பம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 29

`சினி'ஸ்கோப் 29மூடர்கூடம் : மடமையின் நுட்பம்!’எங்க குப்பத்துல நான் எவ்வளவு பெரிய ஆள்னு இவனுகளுக்கு தெரியல. இங்க ஒரு மருடர்னு விழுந்துடக்கூடாதேனு கம்முனு இருக்கேன்’ என்கிறான் கன்னிஸ். அதைக் கேட்டு நம் ... மேலும் பார்க்க

Sigma Review: நாலு பேரும் கோடிகளைக் கடத்தும் பிளானும்! ஆனால் இந்த ஆக்ஷன் ரூட்டில் புதுமை இருக்கிறதா?

குரு (சந்தீப் கிஷன்), தன் குடும்பச் சொத்தான பழைய நூலகம் ஒன்றைச் சிரமப்பட்டு நடத்தி வருகிறார். கடன் சுமை ஒரு கோடிக்கும் மேலிருக்க, அதை எப்படியேனும் உடனே அடைக்க வேண்டும் என்ற கட்டாயம். இந்த நிலையில் சூத... மேலும் பார்க்க

அன்பில் அவன் விமர்சனம்: காதல் கவிதை ஓகே; ஆனால் ஆக்ஷன் அதிகாரம் காப்பாற்றுகிறதா?

குடும்பத்தின் எதிர்ப்பை மீறிக் காதலித்துக் கரம்பிடித்த சூர்யா (அசோக் செல்வன்) – இயல் (ப்ரீத்தி முகுந்தன்) தம்பதி, சில ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதார ரீதியாகத் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்... மேலும் பார்க்க

Sigma: "படம் பார்த்துட்டு அம்மாவோட ரியாக்ஷன்...!" - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க

Sigma: "நடிப்பு மேல முழுமையாக ஆர்வம் இல்லைனு சொல்லிட முடியாது. ஆனா..." - ஜேசன் சஞ்சய்

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Sigma Movie Stillsராஜூ சுந்தரம், அன்புதாசன் ஆகியோர் நடித்திருக்... மேலும் பார்க்க

Shruti Haasan: "எனக்கு கேமராவுக்கு பின்னால் இருந்து இயங்கத்தான் ஆசை!" - ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் தான் திரைத்துறைக்குள் நடிகையாக நுழைந்தது தற்செயலாக நடந்த ஒன்று என்றும், ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் நின்று எழுதவே தான் ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்... மேலும் பார்க்க