செய்திகள் :

Jailer 2: "இன்னைக்கு என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்!" - 'ஜெயிலர் 2' டிரெய்லர் ஹைலைட்ஸ்

post image

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது.

அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவானது 'ஜெயிலர் 2'. அக்டோபர் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Jailer 2 Trailer
Jailer 2 Trailer

ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் என முதல் பாகத்தின் கூட்டணி இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அதோடு, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் புதிய கதாபாத்திரங்களில் இந்த 'ஜெயிலர் 2' படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் டிரெய்லரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், வர்மன் (விநாயகன்) கதாபாத்திரம் இறந்த பிறகு நடக்கும் கதையாகவும் இதனை அமைத்திருக்கிறார்கள் என்பதை டிரெய்லரில் காட்டியிருக்கிறார்கள்.

அத்துடன் சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும் படத்தில் இணைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Jailer 2 Trailer
Jailer 2 Trailer

'ஜெயிலர்' முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரஃப் ஆகியோரின் கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன.

இவர்கள் இரண்டாம் பாகத்திலும் வருகிறார்கள் என்பதை டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​... மேலும் பார்க்க

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்ந... மேலும் பார்க்க

``என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்..!" - இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க

"விடுதலை படத்தில் போலீஸ் கதாபத்திரத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்"- சூரி

நடிகர் சூரி விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (அக்.4) விஜய் ஆண்டனியுடன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய சூரி, "எந்த இடத்துக்கு போனாலும் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க தோன்றும். இங்கே அப்படி தோன... மேலும் பார்க்க

மண்டாடி : 'பிரம்மிப்பா இருக்கு.!'- வாழ்த்திய சூர்யா; நெகிழ்ந்த சூரி

மதிமாறன் புகேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் வெளியான படம் 'மண்டாடி'. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்... மேலும் பார்க்க

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவ... மேலும் பார்க்க