செய்திகள் :

பிசியோ தெரபி செய்வதாக நடித்து ஒப்பந்தாரரிடம் நகை திருட்டு; நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது வழக்கு

post image

நாகர்கோவிலைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா பணம், நகைகளைக் காண்பித்து வீடியோ பதிவிடுவது வழக்கம். குழந்தைக்கு பண குளியல் நடத்துவது, நகைகள் வாங்க செல்வது என அனைத்தையும் வீடியோவாகப் பதிவிட்டுவந்தார்.

இந்த நிலையில் நாகர்கோவில் வி.ஐ.பி கார்டனில் உள்ள மதுமிதா வீட்டில் இருந்து சுமார் 118 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. அந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் இசக்கி பாண்டி உள்பட 4 பேரை ராஜாக்கமங்கலம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 98 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

மதுமிதாவின் வீடியோக்களைப் பார்த்து அவரது வீட்டை அடையாளம் கண்டு நகைகளைக் கொள்ளையடித்ததாக கைதானவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் 5 சவரன் நகை திருடியதாக மதுமிதா மீதுவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி கே.டி.சி நகர் பகுதியைச் சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டரான பேச்சிமுத்து என்பவர் நாகர்கோவில் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு புகார் அளித்துள்ளார். பேச்சிமுத்துவின் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

முதுகுவலிக்காக பிசியோ தெரபி சிகிச்சைக்காக அடிக்கடி திருநெல்வேலி செல்வது வழக்கம். அப்போது, நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா அறிமுகமானார். அவர் அடிக்கடி செல்போனில் பேசுவார்.

ராஜாக்கமங்கலம் காவல்நிலையம்
ராஜாக்கமங்கலம் காவல்நிலையம்

கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி நீதிமன்றம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வருமாறும், தன்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றும் மதுமிதா கூறினார். அங்கு சென்றபோது மதுமிதா எனது காரில் ஏறினார். அதன் பிறகு என்னிடம் பிசியோதெரபி செய்துகொள்ளும்படி கூறினார். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன்.

பின்னர் அவரை நெல்லை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு எனது வீட்டிற்குச் சென்றுவிட்டேன். வீட்டில் சென்று பார்த்தபோது எனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது பற்றி மதுமிதாவிடம் கேட்டபோது, உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.

மேலும், இது தொடர்பாகப் புகார் செய்தால் தன்னை அவதூறாகப் பேசி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியதால், அப்போது புகார் அளிக்காமல் இருந்துவிட்டேன். எனவே தற்போது புகாரளிக்கிறேன், என அந்த மனுவில் கூறியிருந்தார்.

யூடியூபர் மதுமிதா
யூடியூப்பர் மதுமிதா

ஒப்பந்ததாரரின் புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீஸார் மதுமிதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சிமுத்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், இந்த வழக்கை மேல் நடவடிக்கைக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்ற போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திருத்தணி: ஒருதலைக்காதல்; சிறுமியின் அப்பா கொலை - போலீஸார் மீது குற்றம் சாட்டும் உறவினர்கள்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தார. இவரின் மனைவி துர்கா இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ராஜாவின் ஒரு மகளுக்கு 17 வயதாகுகிறது. அவர் அ... மேலும் பார்க்க

`தீவிரவாதிகளுடன் தொடர்பு' - மும்பையில் 5 முதியோர்களை டிஜிட்டல் கைது செய்து ரூ.2.3 கோடி பறிப்பு

சைபர் குற்றவாளிகள் முதியோர்கள் மற்றும் பெண்களை பணமோசடி, போதைப்பொருள் குற்றச்சாட்டு, தீவிரவாதிகளுடன் தொடர்பு என ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மிரட்டி அல்லது டிஜிட்டலில் கைது செய்து ஆன்லைனில் பணம் பறிக்கும... மேலும் பார்க்க

அண்டை வீட்டு வாலிபருடன் பேசிய 14 வயது மகள்; பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - வீடியோ எடுத்த கொடூர தாய்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள அஞ்சார் என்ற கிராமத்தை சேர்ந்த 14 வயது மைனர் பெண்ணை அவரது சொந்த தந்தையே வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட ... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர்: பெண் செய்தியாளர்களுக்கு பாலியல் தொல்லை? டெல்லி காவல்துறைக்கு வலுக்கும் கண்டனம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, பெண் செய்தியாளர்கள் மூவருக்குக் காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்ததா... மேலும் பார்க்க

”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை” - போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!

கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர், பகுதியை சேர்ந்த தம்பதி மதன்(28)– வனிதா. இவர்களுக்கு, கடந்த 16ம் தேதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார ... மேலும் பார்க்க

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரி?

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டு போலீஸார் பாலியல் அத்துமீறலில்... மேலும் பார்க்க