செய்திகள் :

இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி

post image

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக - அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``கடந்த நான்கு மாதங்களில் அரசு அறிவித்து அமல்படுத்திய பெரிய அளவிலான மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் சிறப்பான செயல்பாட்டில் உள்ளன. இதனால் மக்கள் இந்த மாற்றத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எங்கள் வேட்பாளர்களை மக்கள் விரட்டுவதாக வரும் தகவல்கள் அனைத்தும் போலியான சித்தரிக்கப்பட்டவை. சுமார் 10 அமைச்சர்கள் களத்திற்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்தபோது அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பே உண்மை நிலையை உணர்த்துகிறது.

‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’ காரணமாக தனியார் பேருந்துகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

மக்களின் நலனுக்காகச் செயல்படும் இந்த அரசு, ஏதேனும் குறைகள் அல்லது தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அதை உடனடியாகத் திருத்திக் கொள்ளத் தயாராகவே உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் உலவும் செய்திகள் எவ்வித ஆதாரமும் இல்லாதவை.

உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? மேலும், பட்டாசு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வந்த 'சரவெடி பட்டாசு' உற்பத்தி தொடர்பான கோரிக்கைக்குத் தற்போது கிடைத்துள்ள நற்பலன், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பட்டாசுத் தொழிலை மீண்டும் அமோக வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக எம்.பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றியதால், தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபமடைந்திருந்தார். அமைச்சர் ரமேஷ் அவரைச் சமா... மேலும் பார்க்க

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏ... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `50 ஆண்டு போராட்டம்’ - கோயிலின் பூட்டை உடைத்து தலித் மக்களை வழிபட வைத்த பெண் எஸ்.பி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்துக்கு அருகிலிருக்கிறது குரால் கிராமம். அங்கு தனிநபர் ஒருவரின் நிலத்தில் பழமையான ஸ்ரீ கலியுக சீனுவாசப் பெருமாள் கோயில் அமைந்திருக்கிறது. அந்தக் கோயிலுக்கு, தலித் மக்... மேலும் பார்க்க

பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப... மேலும் பார்க்க

திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக... மேலும் பார்க்க

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தூய சக்... மேலும் பார்க்க