செய்திகள் :

'மனைவி கேட்ட ரூ.1 கோடி, மகனின் மருத்துவ செலவால் கடன்' - 43வது மாடியிலிருந்து குதித்த பொறியாளர்

post image

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சாம்பவ் ஜெயின் (28). சாப்ட்வேர் எஞ்சினியராக இவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

அந்த ஹோட்டலின் 43 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் பால்கனியின் வெளியில் இருந்த கம்பெனியில் தொங்கியபடி காணப்பட்டார். அவர் தொங்கிக்கொண்டிருந்தபோது கையை விட்டுவிட்டார்.

இதனால் 43வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். தற்கொலைக்கு முன்பு ஜெயின் வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அதில் மன அழுத்தம் காரணமாகவும், கடன் தொல்லையாலும் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது இந்த முடிவுக்குத் தானே காரணம் என்றும், வேறு யாரும் காரணம் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.1 கோடி கேட்ட மனைவி

ஜெயின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி சும்னேஷ் குமார் கூறுகையில், ''குடும்பம் சூழ்நிலைகள், அவரது மகனின் உடல்நிலை, பெருகிவரும் கடன் மற்றும் திருமண தகராறு ஆகியவற்றால் அவர் மன உளைச்சலில் இருந்தார்'' என்று தெரிவித்தார்.

போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரித்தபோது ஜெயினுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

அவரது மனைவி விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி ஒரு கோடி ரூபாய் கேட்டார். இறுதியில் இது குறித்து பேசி அதனை ரூ.15 லட்சமாகக் குறைத்தனர். அதில் முதல் தவணையாக ரூ.7.5 லட்சத்தை ஏற்கனவே ஜெயின் தனது மனைவிக்குக் கொடுத்து இருந்தார்.

மகனுக்கு ரூ.40 லட்சம் செலவு

அதோடு அவர்களுக்குக் கடந்த ஆண்டு மகன் பிறந்தான். ஆனால் அவன் குறை பிரசவத்தில் பிறந்ததால் அவனுக்கு இதுவரை ரூ.40 லட்சம் வரை செலவு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதற்காக அதிக அளவில் கடன் வாங்கி இருந்தார்.

மேலும் 140 கிலோ எடையுடன் ஜெயின் இருந்ததால் அதிக அளவில் உடல் நலப்பிரச்னையும் இருந்தது. இது போன்ற பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தம் ஏற்பட்டு இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்கொலைக்கு முன்பு அவர் தனது தந்தையுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் தன்னால் இனி வாழமுடியாது என்றும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

விவாகரத்து பெற்ற மனைவிக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஒன்று கூடிய ஆண்களின் கோரிக்கைகள் என்னென்ன?

தற்போது பித்ரு பக்‌ஷா எனப்படும் 16 நாள் சடங்குகள் நடந்து வருகிறது. இந்த 16 நாட்களில் இறந்த உறவுகளுக்கு திதி அல்லது திவசம் கொடுக்கப்படுவது வழக்கம். ஒவ்வொருவரும் தங்களது இறந்த உறவுகளுக்காக ஆறுகள், கடல்க... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் மகாத்மா காந்தி குறித்து ஆட்சேபகரமான ரீல்ஸ் - பெண் சோசியல் மீடியா பிரபலம் கைது

இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். ஆனால் மகாத்மா காந்தியின் புகைப்படம் 500 ரூபாய் நோட்டில் வித்தியாசமான முறையில் இடம் பெற்று இருப்பது போன்ற... மேலும் பார்க்க

'26 வருட பணி; சிந்தூர் ஆபரேஷன் வரை பங்களிப்பு!' - ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(60). இவர், இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து வாகா எல்லையில் தொடங்கி பத்தான்கோட், ரஜோரியின் பனிமலை, ம... மேலும் பார்க்க

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்'- மும்பை பேரணியில் தாக்கரே சகோதரர்கள் கோரிக்கை!

மும்பையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து மிகப்பெ... மேலும் பார்க்க

வீவ்ஸ் & வொண்டர்ஸ்’26 : RmKV-யின் புதிய கலெக்சன் அறிமுகம்!

நூற்றாண்டுக்கும் மேலாக, தனித்துவமான பட்டுப் புடவைகளுக்காகவும், கைத்தறித் துறைக்கான சிறப்பான அர்ப்பணிப்பிற்காகவும் ஆரெம்கேவி சில்க்ஸ் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மரபைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஹம்ச தம... மேலும் பார்க்க

SIR முடிந்த மாநிலங்களில் விடுபட்ட, புதிய வாக்காளர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

மத்திய தேர்தல் கமிஷன் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 13 கோடி வாக்காளர்கள் பட்டிய... மேலும் பார்க்க