செய்திகள் :

தாராபுரம்: முதல்வர் விஜய்க்கு மாட்டு வண்டி ஓட்டியவர் தேடப்படும் குற்றவாளியா? சர்ச்சை பின்னணி என்ன?

post image

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த‌.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட்டு வண்டியில் பயணித்தும் விவசாயிகளுடன் முருங்கைக்காய் பறித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் மாட்டு வண்டி பயணித்தின்போது அஷோக் என்ற நபர் அந்த மாட்டு வண்டியை ஓட்டியுள்ளார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த அஷோக், சத்தியபாமாவைப் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார் என்ற காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை. கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுகிறோம்‌ என்கிற பெயரில் அவரை மிரட்டி த.வெ.க- வில் இணைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்
முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்

இது குறித்து தெரிவித்த அ‌.தி.மு.க திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், "பொட்டிக்காபாளையம் அஷோக் என்பவர் எங்கள் கட்சியில்தான் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார் என்ற காரணத்திற்காக அஷோக் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். அஷோக்கைத் தேடி வருவதாக காவல்துறை கூறியிருந்தது. ஆனால், அஷோக்கை மட்டும் இரவோடு இரவாக மிரட்டி த.வெ.க-வில் இணைய வைத்திருக்கிறார்கள். அதோடு விடமால், முதலமைச்சருக்கு மாட்டு வண்டியை ஓட்ட வைத்திருக்கிறார்கள். அதற்கு ஆடியோ ஆதாரம் இருக்கிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கட்சி மாறினாலும் அவர் தேடப்படும் குற்றவாளிதான்" என்றார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அனல் பறந்த இறுதிகட்ட பிரசாரம்!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்என்.ஆர்.காங்கிரஸ் பிரச்சாரம்திமுக பிரச்சாரம்காங்கிரஸ் பிரச்சாரம்கம்யூனிஸ்ட் பிரச்சாரம்போலிசார் அணிவகுப்துணை ராணுவத்தினர் அணிவகுப்பு காங்கிரஸ் பிரச்சாரம்என்.ஆர்.காங்கிரஸ் பிரச்... மேலும் பார்க்க

By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!'- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசார நிறைவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட வ... மேலும் பார்க்க

தாராபுரத்தில் விஜய் இன்று பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான‌ ஜோசப் விஜய் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். மி... மேலும் பார்க்க

தாராபுரம்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கனிமொழி பிரசாரம் | Photo Album

தாராபுரம் இடைத்தேர்தல் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்தாராபுரம் இடைத்தேர்தல் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்தாரா... மேலும் பார்க்க

தாராபுரம்: "துரோகத்திற்கு நீதி கேட்டு வந்திருக்கிறேன்" - எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ளது நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொது... மேலும் பார்க்க

தாராபுரம்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் | Photo Album

திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இடைத்தேர்தல் உதய ஸ்டாலின் பிரச்சாரம்திருப்பூர் இ... மேலும் பார்க்க