செய்திகள் :

அற்புதக் கலைஞர் சிவாஜிக்கு அரசுகள் தகுந்த அங்கீகாரம் அளித்ததா? – ஒரு ரசிகரின் மனக்குமுறல்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

தமிழ்நாட்டில், விழுப்புரத்தில் சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் 4வது மகனாகப் பிறந்தார் சிவாஜி கணேசன். அவரது இயற்பெயர் கணேசமூர்த்தி. தன்னுடைய ஏழாவது வயதில் முதன் முதலாக ராமாயணம் நாடகத்தில் சீதை வேடத்தில் நடித்தார்.

1946ஆம் வருடம் பேரறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் மராட்டியப் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அவரது நடிப்புத் திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை சிவாஜி கணேசன் என்று அழைக்க, அந்தப் பெயர் நிலைத்து விட்டது. 1952ஆம் வருடம் கலைஞர் கருணாநிதி அவர்களின் கதை, வசனத்தில் வெளி வந்த பராசக்தி படம் மூலமாகத் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், கலைக்குரிசில் என்று எண்ணற்ற பட்டங்கள். வசன உச்சரிப்பில் செந்தமிழ், பேச்சு வழக்குத் தமிழ் என்று எதுவானாலும் அவருக்கு நிகர் என்று வேறொருவர் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த சில வேடங்களை நினவு கூறுகிறேன்.

பராசக்தியில் குணசேகரனாக கலைஞரின் அழகு தமிழில் நீதிமன்றத்தில் அவர் வாதிடும் காட்சி மறக்க முடியாதது. அதைப் போலவே மனோகராவில் அரசவையில் தந்தையிடம் வாதிடும் காட்சி. வசனம் பேசுகின்ற அழகிற்கும், நடிப்பிற்கும் “வீரபாண்டிய கட்டபொம்மன்” மறக்க முடியாத படம். “கப்பலோட்டிய தமிழன்” படத்தில் செக்கிழுத்த செம்மல் “வ.உ.சிதம்பரனார் அவர்களை கண் முன் கொண்டு வந்தார்.

பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த “ப” வரிசை படங்கள் அனைத்தும் சிவாஜியின் திறமைக்கு சாட்சி. அண்ணன், தங்கை பாசம் என்றால் பாசமலர் படம் தான் நினைவிற்கு வரும். எந்த படத்திலும் தனக்கென முத்திரை பதித்தார். வில்லனாக “பெண்ணின் பெருமை”, பழிக்குப் பழி வாங்கும் நாயகனாக “அன்னையின் ஆணை”, குணச்சித்திர நடிப்பில் “ஆலய மணி” அடுக்கிக் கொண்டே போகலாம்.

'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில்

பல வேடங்களில் தந்தையாக நடித்தாலும் ஒவ்வொன்றிலும் வேறுபாடு காட்டியது அவருடைய தனிச்சிறப்பு. குடும்ப கௌரவம் முக்கியம் என்ற ‘பார் மகளே பார்”, “உயர்ந்த மனிதன்”, இரண்டு குடும்பங்களுடன் தத்தளித்த “மோட்டார் சுந்தரம் பிள்ளை:, “எங்க ஊர் ராஜா” என்று எத்தனையோ.

படத்தில் தன்னுடைய வேடத்திற்கேற்ப பாவனைகளை மாற்றிக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லையெனலாம். பாலக்காடு பிராமணத் தந்தையாக “வியட்நாம் வீடு”, புகழ் பெற்ற வக்கீலாக “கௌரவம்”, தவறு செய்த மகனை கைது செய்யத் தயங்காத காவல் துறை அதிகாரியாக “தங்கப் பதக்கம்.” ஒவ்வொன்றிலும் அவருடைய நடிப்பு வேறானது.

அறுபதுகளில் இரவுக் கேளிக்கைகளை முன்னிலைப்படுத்தி நிறைய ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டு கொட்டகை நிறைந்த காட்சியாக ஓடிக் கொண்டிருந்தன. அந்த நிலை மாறவேண்டும் என்று ஏ.பி.நாகராஜன் அவர்கள் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் திரைப்படம் வெற்றி பெற்று, பெருமளவில் ஆன்மீகப் படங்கள் தமிழில் வெளிவர வழி வகுத்தன.

திருவருட்செல்வரில் “மன்னவன் வந்தானடி” பாடலில் அவர் நடந்து வரும் அழகு, திருவிளையாடலில் தருமியிடம் பேசும் போது அவருடைய நிமிர்ந்த நடை, எண்பதைத் தாண்டிய நாயனார் திருநாவுக்கரசராக உடை நெகிழ எழுந்து நிற்கும் காட்சி, “நவராத்திரி” திரைப்படத்தில் ஒன்பது வேடங்களிலும் அவர் காட்டிய வேற்றுமை, நாதசுவர கலைஞன் சிக்கில் சண்முகசுந்தரமாக நடித்த அழகு.... அம்மம்மா சிவாஜி ஒரு பிறவிக் கலைஞர்.

அப்பர் வேடத்தைப் பாராட்டி கல்கி பத்திரிகை அட்டைப் படத்தில் அதை பிரசுரித்தது. என்னுடைய மனம் சிலமுறை நெருடும் – இந்த அற்புதக் கலைஞனுக்கு உரிய அங்கீகாரத்தை அரசுகள் அளிக்கவில்லையோ என்று.

பிறப்பு : 01-10-1928 மறைவு : 21-07-2001

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

“மாதவிடாய் நிற்கும் முன்பருவமும் நானும்!” - பெண்களின் உடல், மனம் குறித்த ஓர் ஆத்மார்த்தப் பதிவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

50 வயதில் விமானி... மருத்துவத்தில் புதிய புரட்சி! – தடைகளை உடைத்த பெண் மருத்துவர் வர்ஜீனியா அப்கர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஈகோ அரசியலும், இந்திய ஜனநாயகமும்! - வாசகர் வாய்ஸ்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கண்ணதாசன் ஒரு தமிழ்ப் பித்தன் - எளிய மக்களின் இதயத்தில் தமிழை வாழ வைத்த கவிஞன்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மஹாளய பட்சம் 2026 – முன்னோர்களின் ஆசியைப் பெற 15 நாட்களும் என்ன செய்ய வேண்டும்?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ரூ.1.27 லட்சம் கோடியில் செமிகான் 2.0! – சிப் தயாரிப்பில் உலகை ஆளப் போகும் இந்தியா